Home தமிழகம் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு !

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து.. 5 பேர் உயிரிழப்பு !

குடும்பத்தோடு  மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர், பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது குடும்பத்தோடு  மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள ரெட்டிப்புதூர் என்னும் பகுதியில் இவர் சென்று கொண்டிருக்கும் போது, முன்னால். ஒரு வாகனம் காரை முந்திக் கொண்டு சென்றுள்ளது. அதனால், இவரும் சாலையில் இடது புறத்தில் இருந்த அந்த வாகனத்தை அதிவேகமாகக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

ttn

அப்போது, இடது புற சாலையில் விதிகளை மீறி லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.கார் வேகமாகச் சென்றதில், நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவகுமார், அவரது மனைவி, குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம்: கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில...

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

திருவாரூர் திருவாரூர் அருகே மின் கம்பத்தில் சிக்கிய பசு மாட்டை மீட்க சென்ற தொழிலாளி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர்...

மதியம் குட்டித் தூக்கம் நல்லதா… கெட்டதா?

பகல் நேரத்தில் மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் என்பது பலருக்கு விருப்பமான ஒன்று. குழந்தைகள் அழகாக மதியம் தூங்கிவிடுவார்கள். பெரியவர்களால் அப்படி தூங்க முடிவது இல்லை. அலுவலக வேலை,...

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 11 கோடியே 60 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 25 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய...
TopTamilNews