சாலைகளில் பேனர் வைக்கத் தடை: பாராட்டு தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை: சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை வரவேற்று அக்கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். நேற்று முன்தினம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “விதிகளை மீறி பேனர்கள் வைப்போர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்படும் கட்சியில் இணைய வேண்டியதுதானே?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர். 

high court

மேலும், விதிகளை மீறி பேனர்கள் வைத்தோர் தொடர்பான விரிவான விளக்கத்தை நாளைக்குள்(இன்று 19/12) தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மறு உத்தரவு வரும் வரையில் தமிழக சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதனைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாகப் பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!” என பதிவிட்டுள்ளார்.

Most Popular

கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்- குடியரசு தலைவர்

74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “புதிய கல்விக் கொள்கை சிறப்பானது. தாய்மொழியில் கற்பது,...

பாடகர் எஸ்.பி.பி. நலமாகவே இருக்கிறார் -எஸ்.பி.பி மகன் சரண்

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு மோசமாக இல்லை நலமாகவே இருக்கிறார் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். கடந்த 5ஆம் தேதி பிரபல பாடகரான எஸ்.பி சுப்பிரமணியனுத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது....

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...
Do NOT follow this link or you will be banned from the site!