சாய்பாபா பிறப்பிடம் பற்றி உத்தவ் தாக்கரேவின் சர்ச்சை பேச்சு : ‘ஷீரடி சாய்பாபா கோவில்’ காலவரையின்றி மூடல்.. !

சாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை, ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பாத்ரியில் இருக்கிறது. அந்த இடத்தை மேம்படுத்த ரூ .100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

ttn

சாய் பாபாவின் பிறப்பிடம் குறித்து எந்த ஆவணமும் கிடைக்கவில்லை, ஷீரடியில் தங்கியிருந்த காலத்தில் சாய் பாபாவே தனது பிறப்பிடம் அல்லது மதம் குறித்த எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இருக்கையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அதிருப்தி அடைந்து, அவர் கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

ttn

இந்நிலையில், சாய் பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று உத்தவ் தாக்கரே கூறியதை எதிர்த்து மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலை காலவரையின்றி மூட அக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது ஷீரடி குறித்து கிளம்பி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு  ஜனவரி 19 ஆம் தேதி முதல் கோவில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும், இது தொடர்பாக விவாதிக்கக் கிராமத்தினர் கூட்டம் இன்று மாலை ஒருங்கிணைக்கப்படும் என்றும் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்றும்  சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். 
 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....