Home சினிமா சாமி சிலை அருகில் சிலுவையா? நெட்டிசன் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்த மாதவன்

சாமி சிலை அருகில் சிலுவையா? நெட்டிசன் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்த மாதவன்

ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் ஆகியவைக்கு சேர்ந்து நேற்று வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

ரக்ஷா பந்தன், சுதந்திர தினம், ஆணி அவிட்டம் ஆகியவைக்கு சேர்ந்து நேற்று வாழ்த்து தெரிவித்து மாதவன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் மாதவன், அவர் அப்பா, மகன் வேதாந்த் ஆகியோர் புது பூணூல் போட்டு கொண்டு அமர்ந்துள்ளனர். 

அந்த புகைப்படத்தின் பின்னல் இருக்கும் பூஜை அறையில் சாமி சிலைக்கு அருகே சிலுவை ஒன்று உள்ளது. அதை பார்த்தவர்கள் நெட்டிசன் ஒருவர், ‘தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்தது உண்டா? என்று மாதவனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அவரின் கேள்விக்குத் தக்க பதிலடி கொடுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘உங்களைப் போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். அங்கு உள்ள பொற்கோவில் படத்தை பார்த்துவிட்டு, சீக்கியராகிவிட்டீர்களா என்று கேட்காதது வியப்பாக உள்ளது. தர்காக்களில் இருந்து ஆசி பெற்றுள்ளேன். உலகில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலிருந்தும் ஆசி பெற்றுள்ளேன். அதில் சிலது எனக்கு பரிசாக வந்தது, சிலது வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதங்களும் ஏற்கப்பட்டுள்ளது. என் அடையாளத்தைப் பெருமையுடன் தக்க வைக்க வேண்டும். அதே சமயம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்துள்ளனர். 

எம்மதமும் சம்மதம். என் மகனும் இதையே பின்பற்றுவார் என்று நம்புகிறேன். கோவில் இல்லாத இடங்களில் தர்கா, குருத்வாரா, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளேன். நான் இந்து என்பது தெரிந்து அவர்கள் மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தினார்கள். அதற்கு நான் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டாமா? என்று கூறியுள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தனது 3ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி....

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்

16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு...

மீண்டும் இந்தியில் கடிதம்… எழுதிய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி சு. வெங்கடேசன் எம்பி சம்பவம்!

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களைச் செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள்...
TopTamilNews