Home தமிழகம் சாமி சிலைக்கு பட்டை நாமம், செருப்பு மாலை : மர்ம நபர்கள் அட்டகாசம்!

சாமி சிலைக்கு பட்டை நாமம், செருப்பு மாலை : மர்ம நபர்கள் அட்டகாசம்!

மர்ம நபர்கள் சிலர்   முனியப்ப சுவாமி சிலையின் முகத்தில் பட்டையாக நாமம் அடித்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர்.

சாமி சிலைக்கு பட்டை நாமம், செருப்பு மாலை : மர்ம நபர்கள் அட்டகாசம்!

தருமபுரி : சாமி சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ளது  கூத்தப்பாடி கிராமம். இங்கு பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது.  அப்பகுதி மக்கள் முனியப்பன் சுவாமியை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆண்டுதோறும் முனியப்ப சுவாமிக்கு 2ஆயிரம் களி உருண்டைகள் படைத்து மழைவேண்டி விழா எடுப்பது வழக்கம். 

இந்நிலையில் விழாவானது இன்று நடைபெறவிருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர்   முனியப்ப சுவாமி சிலையின் முகத்தில் பட்டையாக நாமம் அடித்து, செருப்பு மாலை அணிவித்திருந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையடுத்து அப்பகுதி மக்கள், இதுபோன்ற அசம்பாவிதத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை  கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  ஏரியூர் – பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. 

சாமி சிலைக்கு பட்டை நாமம், செருப்பு மாலை : மர்ம நபர்கள் அட்டகாசம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிரீமிலேயர் வரம்பு: வேளாண் வருமானம்சம்பளத்தை கணக்கில் சேர்க்கக் கூடாது!

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்தும் ஆராய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்...

கோவையில் பிளாஸ்டிக் கடையில் திடீர் தீ விபத்து… ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்!

கோவை கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருடகள் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி...

கையில் அரிவாளுடன் குத்தாட்டம்; வைரலான வீடியோவால் சிக்கிய இளைஞர்!

தூத்துக்குடி அருகே கையில் அரிவாளுடன் சினிமா பாட்டுக்கு நடனமாடிய இளைஞர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சினிமா பாடல்...
- Advertisment -
TopTamilNews