சாமியாருடன் படுக்கைக்கு செல்ல மறுத்த மனைவியை கொன்ற கணவன்: காரணம் இதுதானாம்!

சாமியாருடன் படுக்கைக்குச் செல்ல மறுத்த மனைவியை கொலை செய்த வழக்கில் பெண்ணின் கணவர் மற்றும் சாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சாமியாருடன் படுக்கைக்குச் செல்ல மறுத்த மனைவியை கொலை செய்த வழக்கில் பெண்ணின் கணவர் மற்றும் சாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அலிகார் பகுதியைச் சேர்ந்த மான்பால் சிங். இவர் தன்னுடைய மனைவி ரஜினியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மான்பால் சிங்கிற்கு உழைப்பின்றி பணக்காரனாக ஆகிவிட வேண்டும் என்ற பேராசை இருந்துள்ளது. இதனிடையே மான்பால் சிங்கிற்கு சாமியார் சந்தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

 

money

இதையடுத்து ஒருநாள் மதுபோதையிலிருந்த சாமியார் மான்பால் சிங்கிடம் உன் மனைவியை என்னுடன் படுக்கையை அனுப்பினால், நான் உன்னை பணக்காரனாக மாற்றிக்காட்டுகிறேன் என்று கூறியதாகத்  தெரிகிறது.  பணக்காரனாக  வேண்டும் என்ற எண்ணத்தில், மனைவியை  சாமியாருடன் படுக்கைக்குச் செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார் மான்பால் சிங். இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது மனைவி ரஜினி,  தன்னுடைய சகோதரரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அவரும் மான்பாலை எச்சரித்துள்ளார். 

suicide

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்குக் கங்கை ஆற்றில் ரஜினியின் சடலமாக மிதந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது சகோதரர் போலீசில், கங்கை நதியில் பூஜை என்று சொல்லி அழைத்துச் சென்று  தங்கையைக் கொன்று விட்டதாகப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கங்கை நதியிலிருந்து ரஜினியின்  சடலத்தை மீட்டுள்ளனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து கணவர்  மான்பால் மற்றும் சாமியாரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாமியார் சந்தாஸ்   ஹெராயின் வைத்திருந்த குற்றத்திற்காக ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும்...

பொய்யின் குப்பைகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.. பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் தூய்மை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் நடைபெறும் குப்பை இல்லாத இந்தியா...

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

அயோத்தியில் கடந்த 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல்லையும் நாட்டினார். இந்த விழாவுக்கு குடியரசு தலைவரையும் பிரதமர் மோடி அழைத்திருக்க வேண்டும்...

லாக்டவுனால் செருப்பு விற்பனை சுமாரு.. ரூ.101 கோடி நஷ்டத்தை சந்தித்த பாட்டா

பிரபல காலணிகள் தயாரிப்பு நிறுவனமான பாட்டா இந்தியா நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் பாட்டா இந்தியா நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.100.88 கோடி...