சவுண்டு ஒன் ட்ரம் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் ஆனது

சவுண்டு ஒன் ட்ரம் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: சவுண்டு ஒன் ட்ரம் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் தங்கள் சாதனங்களை அறிமுகம் செய்வதில் சவுண்டு ஒன் நிறுவனம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது சவுண்டு ஒன் ட்ரம் போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.3,490 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அமேசானில் இந்த ஸ்பீக்கர் தற்போது ரூ.1,990-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் சிறப்பம்சங்களாக 4.2 புளூடூத் கனெக்டிவிட்டி, தூசி மற்றும் தண்ணீர் புகாமல் இருப்பதற்கான IPX5 சான்றிதழ், 10W ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் பாடல்களை பிளே செய்யும் வசதி, மைக் வசதி, வாய்ஸ் கால்களை மேற்கொள்ளும் வசதி, 2000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 3.5mm ஆடியா ஜாக், யுஎஸ்பி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Popular

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...

பழனி திமுக எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாருக்கு கொரோனா

பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக மாநில...