Home தொழில்நுட்பம் சர்வதேச சந்தையில் நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன் அறிமுகம்

சர்வதேச சந்தையில் நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு பை ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

பெய்ஜிங்: ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி நோக்கியா 8.1 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இது உருவாகி உள்ளது.

ஏ.ஐ சீன் டிடெக்ஷன் வசதி கொண்டிருக்கும் இதன் கேமரா புகைப்படங்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது. இதுதவிர ஏ.ஐ பியூட்டி, ஏ.ஐ போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல் வியூ மோட் ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் பியூர் டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710

– 4 ஜிபி ரேம்

– 64 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம்

ஆன்ட்ராய்டு 9.0 (பை) இயங்குதளம்

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS

– 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

விரல்ரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர், ஸ்டீல்/காப்பர், ஐயன்/ஸ்டீல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399 யூரோக்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.31,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

முறையாக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே முறையாக குடிநீர் வழங்காத டேங்க் ஆபரேட்டரை கண்டித்து, கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுகொல்லை பகுதியில்...

சசிகலாவுக்கு எதிராக சதி; உண்மையில் ஜெயலலிதா இறந்தது இந்த தேதியில் தான் – திவாகரன்

முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையுமான ஜெயலலிதா, 5 முறை தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக்...

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர், 9 ஆண்டுகளுக்கு பின் கைது

கோவையில் பள்ளி மாணவிக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியரை, 9 ஆண்டுகளுக்கு பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். கோவை குனியமுத்தூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி...

மூன்று மொழிகளில் LPL தொடர் தீம் பாடல்!

இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் பல நாடுகளையும் அவ்வாறு நடத்த தூண்டியுள்ளன. ரசிகர்கள் அதிகரிப்பது ஒருபக்கம், அதன் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.
Do NOT follow this link or you will be banned from the site!