Home லைப்ஸ்டைல் சர்க்கரை நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்

கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் என்று ஸ்டைலீஷான காய்கறிகளையே சமைத்து பழகி விட்டோம். ஆனால், நாட்டு காய்கறிகள் என்று வகைப்படுத்தப்படும் அவரைக்காய், பீர்க்கங்காய், நூக்கோல், கோவைக்காய், புடலைங்காய் போன்றவைகளில் தான் நமது ஊரின் தட்ப வெட்பநிலைக்கேற்ப சத்துக்கள் இருக்கின்றன. ஏற்கெனவே வெப்பத்தில் வதங்கிக் கொண்டிருக்கும் நாம், வெளிநாட்டில், குளிருக்கு இதமாக சாப்பிடும் காய்கறிகளைச் சாப்பிட்டு மேலும் உடலை வெப்பத்தில் தகிக்க விடுகிறோம்.

கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட் என்று ஸ்டைலீஷான காய்கறிகளையே சமைத்து பழகி விட்டோம். ஆனால், நாட்டு காய்கறிகள் என்று வகைப்படுத்தப்படும் அவரைக்காய், பீர்க்கங்காய், நூக்கோல், கோவைக்காய், புடலைங்காய் போன்றவைகளில் தான் நமது ஊரின் தட்ப வெட்பநிலைக்கேற்ப சத்துக்கள் இருக்கின்றன. ஏற்கெனவே வெப்பத்தில் வதங்கிக் கொண்டிருக்கும் நாம், வெளிநாட்டில், குளிருக்கு இதமாக சாப்பிடும் காய்கறிகளைச் சாப்பிட்டு மேலும் உடலை வெப்பத்தில் தகிக்க விடுகிறோம்.

gourd

அந்தந்த பருவ காலத்தில் விளையும் காய்கறிகளை சமையலில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே நம் ஆரோக்கியம் நான் உண்ணும் உணவிலேயே மேம்படும். பீர்க்கங்காயில்  நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. நார்சத்துக்கள் அதிகளவில் இருந்தாலும் இது குறைந்த கலோரிகளை கொண்டது. ஆரோக்கியத்துக்கு அவசியமான அத்தனை உயிர்ச்சத்துகளையும் உள்ளடக்கிய காய் பீர்க்கங்காய். வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன.
செல்லுலோஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய் என்பதால் மலச்சிக்கலுக்கும், மூல நோய்க்கும் மாமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்கிற இரண்டும் இயற்கையான இன்சுலினாக செயல்படுவதால், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பீர்க்கங்காயில் உள்ள அதிகளவிலான பீட்டா கரோட்டின், பார்வைக் கோளாறுகள் வராமலும், பார்வைத் திறன் சிறக்கவும் உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் பீர்க்கங்காயின் பங்கு மகத்தானது. கல்லீரல் ஆரோக்கியம் காப்பதிலும், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலைத் தேற்றுவதிலும் கூட பீர்க்கங்காய் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 
மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

gourd

பீர்க்கம்பூக்களும் கூட சித்த மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும். ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது. சிறுநீர் கழிக்கும் போது உருவாகும் எரிச்சலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.

gourd

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

இளைஞரிடம் கத்திமுனையில் நகை, பணம் வழிப்பறி- பெங்களூரை சேர்ந்த 4 பேர் கைது

திருநெல்வேலி நெல்லை அருகே இளைஞரிடம் கத்திமுனையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெங்களூரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

‘சும்மா ஆக்டிங்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி...

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக்கில் ரசீது, விலைப்பட்டியல் : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு...
Do NOT follow this link or you will be banned from the site!