Home அரசியல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட விஷயத்தை கேட்டால் விஜய்- அஜித் ரசிகர்கள் பொசிங்கிடுவாங்க.!

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி பட விஷயத்தை கேட்டால் விஜய்- அஜித் ரசிகர்கள் பொசிங்கிடுவாங்க.!

பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், வருகிற டிசம்பர் மாதம் தேனியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள், ஜேடி- ஜெர்ரி இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தை எதிர்நோக்கி ஒட்டுமொத்த திரையுலகமும் காத்து கொண்டிருக்கிறது.

பல்வேறு விதமான கேலி கிண்டல்களை மீறியும், தன்னம்பிக்கையுடன் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து தமிழக அளவில் பிரபலமானவர் சரவணன் அருள்.

saravana

இப்படி விளம்பரங்களில் நடித்து வந்தவருக்கு மேலும் ஊக்கம் அளித்து நாயகனாக்கி இருக்கின்றனர், இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி. பல கோடி ரூபாய் செலவில் உருவாக இருக்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள், வருகிற டிசம்பர் மாதம் தேனியை ஒட்டிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

படப்பிடிப்பின் ஆரம்பமே பாடல் காட்சி ஒன்று படமாக இருக்கிறதாம். குறிப்பிட்ட பாடல் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான பில்டப்புடன், ஒட்டுமொத்த கிராமமும் கொண்டாட, நாயகன் சரவணனை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைய இருக்கிறதாம்.saravana store

இதற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள், அண்ணாச்சியின் பெயர் பெருமைகள் பாடல் முழுவதும் ஒலிக்கும் விதத்தில், தீவிரமாக இசையமைத்து வருகிற தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“என்மீது பழிசுமத்தி அவதூறு பரப்புகின்றனர்” : திருமாவளவன்

தன் மீது பழிசுமத்தி அவதூறு பரப்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி...

முதல்வர் பழனிசாமி ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை கொண்டப்படுவதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியின்...

தமிழகத்தில் மேலும் என்னென்ன தளர்வுகள்? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 28ஆம்...

குஜிலியம்பாறையில் தொழிற்பேட்டை : தமிழக முதல்வருக்கு நன்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமையவுள்ள தொழிற்சாலைக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல் வர்த்தக சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட பழைய கரூர்சாலையில் உள்ள குஜிலியம்பாறை...
Do NOT follow this link or you will be banned from the site!