Home அரசியல் சமூக இடைவெளியை அர்த்தமற்றதாக்கும் தும்மல்! - கனடா ஆராய்ச்சி பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து

சமூக இடைவெளியை அர்த்தமற்றதாக்கும் தும்மல்! – கனடா ஆராய்ச்சி பற்றி டாக்டர் ராமதாஸ் கருத்து

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கொரோனா பரவும் வேகம் குறைந்தது, சித்திரை திருவிழா ரத்து, இளைஞர்களின் செயல்பாடு என பல்வேறு கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். 

தும்மல் தொடர்பாக கனடா மேற்கொண்ட ஆய்வு சமூக இடைவெளியை அர்த்தமற்றதாக்குகிறது என்று டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கொரோனா பரவும் வேகம் குறைந்தது, சித்திரை திருவிழா ரத்து, இளைஞர்களின் செயல்பாடு என பல்வேறு கருத்துக்களை தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார். 

coughing

அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் விவரம் வருமாறு… குறிப்பாக தும்மல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த பதிவில், 
“கனடா மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி தும்மல்-இருமலின் போது வெளியாகும் சளித்திவலைகள், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக, 3 வினாடிகளில் 6 அடிகளை தாண்டி பயணிக்குமாம். இது  சமூக இடைவெளியை அர்த்தமில்லாததாக்கி விடும். எனவே, ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பதே கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழி!” என்று கூறியுள்ளார்.

மற்ற பதிவுகளில், “காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கும் போதிலும், அதை மதிக்காமல் ஊர் சுற்றித் திரியும் சாகச இளைஞர்களுக்கு கனடா நாட்டு ஆய்வு முடிவுகள் புதிய எச்சரிக்கை ஆகும். இதை அறிந்து அவர்கள் திருந்தினால் நல்லது. இல்லாவிட்டால் இதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் காலை 7.30 மணிக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று மாநகராட்சி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். சந்தையில் அனைத்து நிலைகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுவதையும் உறுதி செய்ய வேண்டும்!

மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது, தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் சாகச இளைஞர்கள் சாலைகளில் சுற்றுவது மட்டும்  குறையவில்லை. குறைந்தபட்ச பொறுப்புடன் செயல்படுவோம்; தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்போம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் கடந்த ஒரு வாரத்தில் 40% குறைந்துள்ளது. இது நோய்த்தடுப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமாகும். அதிவிரைவு ரத்தமாதிரி சோதனைகளை விரைவுபடுத்தி, தேவையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்

தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தா ராவ் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை...

கூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...

அதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல்! இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்

அதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...

ஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்

ஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...
TopTamilNews