சபாநாயகரை நீக்க வேண்டும்! – சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சென்னை: சபாநாயகர் தனபாலை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீனில் இருக்கும் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

அதை உறிதிபடுத்தும் வகையில், சட்டப்பேரவை வளாகத்தில் முக்கிய அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், அவரை நீக்க கோரியும் கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சபாநாயகர் தனபால் செயல்படுகிறார். அதுமட்டுமின்றி, ஒருதலைபட்சமாகவும் செயல்பட்டு வரும் சபாநாயகரை நீக்க சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி கருணாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...

பா.ஜ.க. அரசின் மோசடிகள் ஹரியானாவை திவால் நிலைக்கு தள்ளுகின்றன… காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஹரியானாவின் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ஊழல்கள் மாநிலத்தை திவால் நிலைக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினார்....

போன மாசம் மட்டும் 12.81 லட்சம் பைக், ஸ்கூட்டர் காலி.. மீண்டும் சூடு பிடிக்க தொடங்கிய வாகன விற்பனை

லாக்டவுனால் முடங்கி கிடந்த வாகன விற்பனை தற்போது மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சுத்தமாக வாகன விற்பனை நடக்கவில்லை. மே மாதத்தில் வாகன விற்பனை சிறிது நடைபெற்றது. ஜூன்...
Do NOT follow this link or you will be banned from the site!