Home இந்தியா சபரிமலைக்கு செல்ல வேண்டாம்; காலில் விழுந்து நூதன போராட்டம்

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்; காலில் விழுந்து நூதன போராட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என பெண்கள் காலில் விழுந்து பக்தர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட இருக்கிறது. இதனால் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படியே இன்று 3 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் அவர்களை கோயிலுக்கு செல்லவிடாமல் பம்பையில்  ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இருப்பினும் மாதவி என்ற ஒரு பெண்ணை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் கோயிலுக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில், ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்று பக்தர்கள் பெண்களின் காலில் விழுந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டக்காரர்கள் இரண்டு பெண் பத்திரிகையாளர்களை தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர், “வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் இத்தனை நாள் போராட்டம் என்பது ஒரு யுக புரட்சி. உலகமே இந்த போராட்டத்தைக்...

“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” – ஸ்டாலின் கண்டனம்!

வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு உதவிடும் என்பதால் அமைதி வழியில் தீர்வு காண விவசாயிகள் முயல வேண்டும் என மு.க. ஸ்டாலின் டெல்லி விவசாயிகள் பேரணி குறித்து கூறியுள்ளார்....

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்த நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார். இந்தத் தகவலை சிறைத் துறை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்… 3 இளைஞர்கள் பலி…

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி...
Do NOT follow this link or you will be banned from the site!