சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்: மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சம்மட்டியால் அடித்து கொலை செய்து கணவனும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சம்மட்டியால் அடித்து கொலை செய்து கணவனும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்  காளியப்பன். இவரது மனைவி சாந்தா.  கடந்த 30ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த  இவர்களுக்கு முருகன் என்ற மகனும், இந்திராணி என்ற மகளும் உள்ளனர். சாந்தா வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே  புடவை வியாபாரம்,  மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் உதவி பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்ப வருமானத்திற்காகக் கட்டுமான வேலைக்குச் செல்லலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாத காலமாக கட்டுமான பணிக்கு சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், மனைவி சாந்தா மீது சந்தேகம் ஏற்பட்டதால் கட்டுமான  வேலைக்குச்  செல்லக்கூடாது  என காளியப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால்  இரு தினங்களுக்கு முன்பு  சாந்தாவுக்கும் காளியப்பனுக்கும்  இடையே வாக்குவாதம்  முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த காளியப்பன் சம்மட்டியால் சாந்தாவின் தலையில் சம்மட்டியால் அடித்து கொலை செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து  கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாந்தா உடலைக் கைப்பற்றி,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காளியப்பன் தனது முதல் மனைவியின் சொந்த ஊரான சங்ககிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்துகொண்டார்.

சந்தேகத்தால் மனைவியைச் சம்மட்டியால் அடித்து கொலை செய்து விட்டு கணவனும்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரதான அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி!

திருப்பதியில் சுமார் 7,000 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில் அங்கு மக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6...

இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. இலங்கையில் நேற்று முன் தினம் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்களுக்கு நடந்த...

ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு...