Home சினிமா சந்தானத்துடன்  “டிக்கிலோனா” படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்! 

சந்தானத்துடன்  “டிக்கிலோனா” படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்! 

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். இவரது சென்னை தமிழின் ட்வீட்களுக்கு பல புள்ளைங்கோக்கள் அடிமை…. இந்நிலையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதை தெரியப்படுத்தியுள்ளார். 

ஹர்பஜன் ட்வீட்
இதுதொடர்பாஜ ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் , “என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா படக்குழு, சந்தானம் உள்ளிட்டோருக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் அவர் 3 வேடங்களில் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்கும் நடிப்பது உறுதியாகியுள்ளது. 
 

Most Popular

“மாஸ்க் போடு ,இல்லேன்னா மண்டையிலே போடு” -மாஸ்க் அணியாதவருக்கு நேர்ந்த கதி

மாஸ்க் போடாமல் சாலையில் சென்ற ஒரு தந்தை மற்றும் மகனை ஒரு வாலிபர் கூட்டம் கடுமையாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

காதலுக்கு ‘நோ’ சொன்ன சிறுமியை குத்தி கொன்ற 16 வயது சிறுவன்!

13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி...

திருப்பூர்- மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்பு: விசிகவின் மருத்துவமனை முற்றுகை போராட்டம்

மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து விசிகவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மின்தடை...

6 துப்பாக்கித்தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை விமான நிலையத்தின் கழிப்பறையில் 6 துப்பாக்கித் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தின் உள்நாட்டு...
Do NOT follow this link or you will be banned from the site!