Home தமிழகம் சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு படி 15% நீரை மக்கள் பயன்பாட்டிற்கு ஆலைகள் ஏன் இலவசமாக வழங்கவில்லை? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வியை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஏழைகளுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மூடிவிடலாம் என கருத்து தெரிவித்தனர். மேலும், நிலத்தடி நீர் எடுக்கும் அளவை கணக்கிடும் கருவிகள் பொருத்தக் கட்டணம் நிர்ணயிக்க முடிவு எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக அரசு வரும் 19ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

சட்டவிரோத குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் - நீதிமன்றம் உத்தரவு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘வார் ரூம்’… கொரோனாவை ஒழித்துக்கட்ட களமிறங்கிய சென்னை காவலர்கள்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சென்னையின் 9...

கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நேரலை குறிக்கிறது. இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். அந்த சமயம் மக்கள் நதிகளை வணங்கி புனித...

100ஆடு 600 கோழி – உப்பு , வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறிவிருந்து

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விசேஷ பூஜை மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் வீரசூடாமணி பட்டி, சுந்தரராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான ஐந்து...

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்று தந்து வருகின்றனர். முதல் முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை...
- Advertisment -
TopTamilNews