Home தமிழகம் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற காவலர்கள்.. தட்டிக்கேட்ட சக காவலரை தாக்கிய பரபரப்பு சம்பவம்!

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற காவலர்கள்.. தட்டிக்கேட்ட சக காவலரை தாக்கிய பரபரப்பு சம்பவம்!

இரண்டு பேரும் சேர்ந்து காவலர் குடியிருப்பிலேயே மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற காவலர்கள்.. தட்டிக்கேட்ட சக காவலரை தாக்கிய பரபரப்பு சம்பவம்!

தமிழகத்தில் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் மீண்டும் மூடப்பட்டது. அதனால் பலர் பிளாக்கில் மது பாட்டில்களை விற்று வருகின்றனர். இந்நிலையில் சட்ட விரோதமாக காவலர்களே மதுபானம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் காவலர் ஜான் பிரிட்டோ மற்றும் கார்த்திகேயன். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து காவலர் குடியிருப்பிலேயே மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

ttn

இதனை அதே குடியிருப்பில் வசித்து வரும் வேப்பேரி காவல் நிலைய காவலர் வெங்கடேஸ்வர ராவ் பார்த்து, அவர்களை கண்டித்துள்ளார். ஆனால் அதனை அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் வெங்கடேஸ்வர ராவ் மீது கோபத்தில் இருந்த  ஜான் பிரிட்டோ மற்றும் கார்த்திகேயன், அவர் பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், வெங்கடேஸ்வர ராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ttn

இதனையடுத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்றதை தட்டிக் கேட்டதால், தன்னை தாக்கிவிட்டதாக வெங்கடேஸ்வர ராவ் கொடுத்த புகாரின் அடைப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வெங்கடேஸ்வர ராவை தாக்கிய வீடியோ காட்சிகளும் கிடைத்துள்ளது.

 

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற காவலர்கள்.. தட்டிக்கேட்ட சக காவலரை தாக்கிய பரபரப்பு சம்பவம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

இன்று தொடங்கிய 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...
- Advertisment -
TopTamilNews