Home சினிமா சஞ்சீவ் ஹாப்பி தான்... ஆனா ஆல்யா மானஸா படுஅப்செட்டாம்!

சஞ்சீவ் ஹாப்பி தான்… ஆனா ஆல்யா மானஸா படுஅப்செட்டாம்!

இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா-சஞ்சீவ் ஜோடி. ரீல் ஜோடியாக எண்ட்ரி கொடுத்த இந்த ஜோடி நாளடைவில் காதலிப்பதாக அறிவித்தனர். அதையொட்டி இவர்களுக்கு விஜய் தொலைக்காட்சியில் நிச்சயதார்த்தம் கூடச் செய்து வைத்தனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த இளம் ஜோடி அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

alya

 இதையடுத்து இந்த ஜோடி கடந்த மே  மாதம் 27 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டது.  ஆல்யாவின்  வீட்டில் சஞ்சீவ்  இஸ்லாமியர் என்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் இந்த ஜோடி அவசர கல்யாணம் செய்து கொண்டதாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்கள். 

alya

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சீவ்   ஆல்யா மானஸா கர்ப்பமாக இருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.  இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

alya

இந்நிலையில் சஞ்சீவ்  ஹாப்பி அண்ணாச்சியாக இருந்தாலும் ஆல்யா படுஅப்செட்டாக உள்ளாராம். காரணம், ஆல்யா குடும்பத்தில் அவரது அப்பா, தங்கை என அனைவரும்  அவரிடம் கோபம் மறந்து பேசிய போதிலும், அவரது அம்மா மட்டும் இன்னும் கோபம் குறையாமல் உள்ளாராம்.   ஆல்யா மானஸா கர்ப்பமானது தெரிந்தும் கூட அவர் கோபம் தணியவில்லையாம். இதனால்  ஆல்யா வருத்தத்தில் இருக்கிறாராம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 47-வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

தோஷங்களை போக்கும் பிரதோஷத்தில் சோமசூக்த பிரதட்சணம்!

உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் சிவப்பெருமான். இவ்வாறு உலகை காத்த உத்தமனான பரமனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்....

புத்தகத்தில் உள்ளதை திருமா மேற்கோள் காட்டினார்; அவரே சொன்னதுபோல் பாஜக அரசியல் செய்கிறது- கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “குஷ்பு முன்னாள் நடிகை என்பதனால் அவரது கைதை...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! சமூக வலைதளத்தில் உலாவரும் ரஜினியின் கடிதம்…

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...
Do NOT follow this link or you will be banned from the site!