கோவை மேயராகப்போகும் குஜராத் பெண்!

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த தினத்தில் இருந்தே கோவையில் அதிகம் அடிபடும் பெயர் சோனாலி பிரதீப்.இவருக்கு பூர்வீகம் குஜ்ராத்.தாத்தா காலத்திலேயே கோவையில் வந்து குடியேறி விட்ட குஜராத் குடும்ப வாரிசு.வீடு கோவைக் கவுண்டம் பாளையத்தில். கணவர் பிரதீப்,மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்.தமிழிலும்,கிஷோர்,லதாரா ராவ்,கருணாகரன்,மாஸ்ட்டர் ரிஷி நடிப்பில் கடிகார மணிதர்கள் என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த தினத்தில் இருந்தே கோவையில் அதிகம் அடிபடும் பெயர் சோனாலி பிரதீப்.இவருக்கு பூர்வீகம் குஜ்ராத்.தாத்தா காலத்திலேயே கோவையில் வந்து குடியேறி விட்ட குஜராத் குடும்ப வாரிசு.வீடு கோவைக் கவுண்டம் பாளையத்தில். கணவர் பிரதீப்,மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்.தமிழிலும்,கிஷோர்,லதாரா ராவ்,கருணாகரன்,மாஸ்ட்டர் ரிஷி நடிப்பில் கடிகார மணிதர்கள் என்கிற படத்தைத் தயாரித்திருக்கிறார்.

sonali

சோனாலி உள்ளூர் நிறுவனங்களில் மார்கெட்டிங் மேனேஜராகவும்,ஃபிட்னஸ் கன்சல்டெண்ட்டாகவும் பணியாற்றிய சோனாலி உள்ளூரில் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான சோனாலி சமீபத்தில் மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திருமணமான பெண்களுக்கான ‘ மிஸஸ் வேர்ல்டு எர்த் 2019’ போட்டியிலும் வெற்றி போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சோனாலி அமைச்சர் வேலுமணியையும்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார்.

சோனாலியின் தந்தை அதிமுகவில் நீண்டகால உறுப்பினர் என்பதால், சோனாலியும் அதிமுகவில் சேர்ந்ததுடன் கோவை மேயர் பதவிக்கும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். கோவை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் சந்திரசேகர் மனைவி டாக்டர் ஷர்மிளாவுக்கும் இடையேதான் போட்டி என்று பேசப்பட்ட நிலையில்,மறைமுக தேர்தல்.என்றால் இவர்தான் கோவை மேயர் என்று அதிமுகவின் தொண்டர்களே பேசத் துவங்கிவிட்டனர்.

sonali

உள்ளூர் செய்திகளில் தினந்தோறும் எப்படியாவது சோனாலி பிரதீப்பின் பெயர் இடம்பிடித்து விடுகிறது.அதில் லேட்டஸ்ட் செய்தி இவருக்கு தொலை பேசியில் தொல்லை கொடுத்ததாக ஈரோடு குமணன் குட்டையைச் சேர்ந்த ரகுபதி என்கிற திமுக தொண்டர் கைது செய்யப்பட்டு இருப்பது.ஆக,அழகான கோவைக்கு அதிமுக சார்பில் பொருத்தமான மேயர் அமைய வாய்ப்பிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....