Home குற்றம் உள்ளூர் கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன?

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன?

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை: கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிறுமி படுகொலை 

child

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் என்பவருக்கு 6 வயதான ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். சிறுமி படிக்கும் பள்ளி அருகாமையிலேயே இருந்ததால் பள்ளிக்கு தானே சென்று பின்பு வீடு திரும்புவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அப்பகுதியில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காததால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை, தேடும் பணியில் தீவிரம் காட்டினர்.  இதையடுத்து சிறுமி கஸ்தூரி நாயக்கன் புதூர் என்ற இடத்தில் சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கத்தி காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பள்ளத்தில் சடலமாக கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடூரம் 

abuse

இதையடுத்து சிறுமி  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது  பிரேத பரிசோதனையில்   தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இக்கொலை குறித்தும், குற்றவாளிகள்  சம்பந்தமாகத் தகவல் கொடுப்பவர்களுக்குத் தக்க சன்மானம் கொடுக்க பாரும் என்றும் அதே போல் தகவல் கூறுபவரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்று கூறி போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். 

ஆறு நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது 

arrest

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில்  தொண்டாமுத்தூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்  சிறுமியை வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது? அது யார் யார் என்பது தெரிய வரும்.
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆறு நாட்களுக்கு பிறகு போலீசார் ஒருவரை  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ஜொமோட்டோ ஊழியரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம் : கேஸ் போடுவோம் என்று மிரட்டல்!

மாவட்ட செய்திகள்

Most Popular

உத்தர பிரதேசத்தில் நடக்கும் அநியாயம்… 1.09 கோடி நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்துவதே கிடையாதாம்..

உத்தர பிரதேசத்தில் 1.09 கோடி நுகர்வோர் மின் இணைப்பு பெற்ற நாளிலிருந்து மின்சார கட்டணம் செலுத்தியதே கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில்...

நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு.. முதல்ல சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. கர்நாடக அரசு தகவல்

கர்நாடகாவில் நவம்பர் 17ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதலில் சுகாதார பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும்...

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம்...
Do NOT follow this link or you will be banned from the site!