கோவில்கள் பெயரில் போலி இணையதளம்… பல லட்சம் சுருட்டல்!

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவில்கள் பெயரில் போலியான இணையதளம் நடத்தி பல லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆந்திராவில் உள்ள பிரபல இந்து ஆலயங்கள் பெயரில் போலியாக இணையதளங்கள் செயல்பட்டு வருவதாகவும், அன்னதானம், அபிஷேகம், அர்ச்சனை என்று இணையத்திலேயே பணம் செலுத்தலாம் என்று கூறி பக்தர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுவதாகவும் ஆந்திர போலீசாருக்கு புகார் வந்துள்ளது. குறிப்பாக, விஜயவாடா கனகதுர்கா ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் செயல்படுவதாக ஆதாரத்தையும் அளித்திருந்தனர்.

hindu temple

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, கனகதுர்கா ஆலயத்துடன் மேலும் பல ஆலயங்கள் பெயரில் போலி இணையதளம் செயல்பட்டு வந்ததை கண்டறிந்துள்ளனர். இந்த இணையதளத்தில் சிறப்பு தரிசனத்துக்கு டிக்கெட் விற்பனையும் நடந்துள்ளது. அதில் ஆன்லைனில் பணம் செலுத்தி, தேதி நேரத்தை புக் செய்யலாம் என்று கூறப்படவே, பலரும் பணம் செலுத்தி சிறப்பு தரிசனத்துக்கு வந்துள்ளனர். கோவிலுக்கு வந்த பிறகுதான் அப்படி ஒரு தரிசனமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து கோவில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்

temple

. இப்படி சிறப்பு தரிசனம், அர்ச்சனை என்ற பெயரில் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை அந்த இணையதளத்தில் வைத்துள்ளார்கள். பலரும் இது உண்மை என்று நம்பி நேரில் வரவில்லை என்றாலும் நம்முடைய பெயரில் அர்ச்சனை நடக்கட்டுமே என்ற ஆசையில் பணத்தை செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து விஜயவாடா சைபர் கிரைம் போலீசார் அந்த இணையதளத்தை முடக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, எலூரு துவாரகா திருமலை, அன்னவரம் ஶ்ரீவீரவேங்கட சத்தியநாராயணா ஸ்வாமி கோவில் உள்பட பல கோவில்களுக்கு போலி இணையதளம் இருந்தது தெரியவந்தது. அவற்றையும் பிளாக் செய்துள்ளனர். இந்த இணையதளங்களை நடத்தியது யார், யாருடைய வங்கிக் கணக்குக்கு பணம் சென்றது என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

queue

எதை எடுத்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைனில் செய்துவிடலாம் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. ஆன்லைனில் பஸ், டிரெயின், ஃபிளைட் டிக்கெட், சினிமா டிக்கெட் என்று எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது. கோவிலுக்கு செல்வது பற்றி கூட இணையத்தில் தேடுவது அதிகரித்துள்ளது. இப்படி தேடுபவர்களை குறிவைத்து இந்த போலி இணையதளங்கள் செயல்பட்டு வந்துள்ளது.

Most Popular

ஆக்டிவ் கேஸஸில் முதல் 10 மாநிலங்கள் இவைதாம் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

கொரோனா நோய்த் தொற்றில் உலகளவில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. என்றாலும் மற்ற நாடுகளை விட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கும் செய்தியாகும். இறப்பு விகிதம் குறைவாக...

லட்சக்கணக்கில் அதிகரிக்கும் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா நிலவரம்

சென்ற ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றவையே கொரோனா பரவலைத் தடுக்க கடும் போராட்டத்தில் உள்ளன.  இன்றைய தேதி...

விஜயவாடா தீ விபத்தில் 11 பேர் பலி: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல இடங்கள் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில் விஜயவாடா பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றும் கொரோனா வார்டாக மாற்றம்...

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 64,399 பேருக்கு கொரோனா; 881 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைவாகவே இருக்கிறது....