Home சுற்றுலா கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!

கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!

விடிய விடிய நடக்கும் பார்ட்டிகள், மசாஜ்கள், சுதந்திரமான கலாசாரம் என பல்வேறு நினைவுகள் நமது நினைவுக்கு வந்தாலும், சட்டென முதலில் நமது நினைவுக்கு வருவது குடி…குடி…குடி….தான்

கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!

ஜாலியாக நண்பர்களுடன் குடித்து விட்டு கும்மாளம் அடிக்க கோவாவை விட சிறந்த இடம் நம் நாட்டில் எதுவும் இருக்காது.

கோவா என்றதும் அழகிய கடற்கரைகள், சைட் அடிக்க ஏதுவாக அரை குறை ஆடையுடன் சுற்றித் திரியும் ஃபாரின் ஃபிகர்கள் முதல் உள்ளூர் ஃபிகர்கள் வரை, விடிய விடிய நடக்கும் பார்ட்டிகள், மசாஜ்கள், சுதந்திரமான கலாசாரம் என பல்வேறு நினைவுகள் நமது நினைவுக்கு வந்தாலும், சட்டென முதலில் நமது நினைவுக்கு வருவது குடி…குடி…குடி….தான்.

goa

நம்மூரில் கிடைப்பதை விட பாதி விலைக்கு பீர் உள்ளிட்ட இதர மது வகைகள் கிடைக்கும். அவற்றை காலியாக காலியாக வாங்கி கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு பிகினிகளையும், கடல் அலைகளையும் ரசித்துக் கொண்டடே மூக்குமுட்ட குடிப்பதில் அலாதி சுகமே…

goa

ஆனால், தற்போது பீச்சில் உட்கார்ந்து குடிக்க முடியாது. அதற்கு கோவா அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா தளமான கோவாவுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

goa

இவர்களில் முக்கால்வாசி பேர் குடிகாரர்கள் தான். இவர்கள் அனைவரும் பீச்சில் உட்கார்ந்து குடித்து விட்டு, சிகரெட் துண்டுகள், பீர் பாட்டில் மூடிகள் உள்ளிட்ட குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

goa

இந்நிலையில், கோவா கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க புதிய முயற்சி ஒன்றை திருஷ்டி மரைன் எனும் அமைப்பும், கோவா மாநில சுற்றுலாத் துறையும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

waste bar goa

அதன்படி, கோவா பீச்சுகளில் கிடக்கும் சிகரெட் துண்டுகள், பீர் பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உள்ளிட்டவைகளை கொடுத்து பீர் ஒன்றை இலவசமாக வாங்கி குடிக்கலாம். பீச்சில் இருந்து எடுக்கப்பட்ட 20 சிகெரெட் துண்டுகள் அல்லது 10 பீர் பாட்டில் மூடிகளை, பீச்சில் உள்ள சில பார்களுடன் சேர்த்து இயங்கும் ‘waste bar’-களில் கொடுத்தால் ஒரு பீர் இலவசமாக தருவார்கள்.

இதையும் வாசிங்க

கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா… இந்த சம்மருக்கு தேக்கடி போங்க

கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

தடுப்பூசி குறித்து முறையாக அறிவிக்காத அதிகாரிகள்… ஆத்திரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு ஈரோடு வீரப்பன்சத்திரம் மையத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்படுமா? – நீதிமன்றம் நாளை தீர்ப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்...

ஆத்தாடி.. தடுப்பூசியா? தலைதெறிக்க ஓடும் கிராம மக்கள்

தடுப்பூசி போட கிராமத்திற்கு வரும் டாக்டர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பார்த்து ஓடி ஒளிந்துகொள்வதும், ஊருக்குள் விடாமல் அடித்து உதைத்து அனுப்பிய சம்பவங்களும் முன்பெல்லாம் நடந்துள்ளன. இப்போதும் அந்த சம்பவங்கள் நடக்கின்றன.

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை சின்னாபின்னாமாக்கியது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை எட்டியது. உயிரிழப்பும் நான்காயிரத்தைத் தாண்டிச் சென்றது. அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தைக்...
- Advertisment -
TopTamilNews