Home தமிழகம் கோயம்பேடு சந்தை மூலம் 146 பேருக்கு கொரோனா தொற்று பரவியது!

கோயம்பேடு சந்தை மூலம் 146 பேருக்கு கொரோனா தொற்று பரவியது!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தாலும் கோயம்பேடு சந்தை மட்டும் மூடப்படாமல் தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் கோயம்பேடு சந்தைக்கு சென்றவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதன்முறையாக கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கொரோனா உறுதியாக, பழ வியாபாரி, மலர் வியாபாரி, கூலி தொழிலாளிகள், காய்கறி வாங்க சென்ற நபர்கள் என தொடர்ந்து பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. 

dd

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து  காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 146 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு சந்தை மூலம் சென்னையை சேர்ந்த 63 பேருக்கும் காஞ்சிபுரம் – 7, கடலூர் – 17, விழுப்புரம் – 35, அரியலூர் – 22, பெரம்பலூர் – 1, தஞ்சாவூர் – 1 ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

Most Popular

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான ஹத்ராஸ் சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை.. மம்தா பானர்ஜி

உத்தர பிரதேசத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் வெட்கக்கேடான ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்துக்கு சம்பவத்தை கண்டிக்க வார்த்தைகள் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Do NOT follow this link or you will be banned from the site!