Home தமிழகம் கோட்சே இந்து தீவிரவாதி மட்டுமல்ல.. !கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காந்தியின் கொள்ளுபேரன்!!

கோட்சே இந்து தீவிரவாதி மட்டுமல்ல.. !கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காந்தியின் கொள்ளுபேரன்!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுபேரனான துஷார் அருண்காந்தி, கோட்சே ஒரு தீவிரவாதிதான், அவர் ஒரு கொலைக்காரன் தான் என கமலுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கோட்சே இந்து தீவிரவாதி மட்டுமல்ல.. !கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காந்தியின் கொள்ளுபேரன்!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் கொள்ளுபேரனான துஷார் அருண்காந்தி, கோட்சே ஒரு தீவிரவாதிதான், அவர் ஒரு கொலைக்காரன் தான் என கமலுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கடந்த 12 ஆம் தேதி அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என தெரிவித்திருந்தார். கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்தன. அதேபோல் சிலர் கமலுக்கு ஆதரவாகவும் பேசினர். கமல் பேச்சுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இதனால் முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் காந்தியின் கொள்ளுபேரனான, அருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாதுராம் கோட்சே ஒரு இந்துதீவிரவாதி தான். கொலைக்காரன், தீவிரவாதத்தின் ஊற்று என கோட்சே குற்றஞ்சாட்டியுள்ளார். 

cap

மேலும்,  நாதுராமிடமிருந்து கிளம்பிய தீவிரவாதம் தான், மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் தாக்குதல் என பல தாக்குதல் சம்பவங்களில் தலைத்தூக்கியது. அதுமட்டுமின்றி டபோல்கர், பன்சாரே, கல்பர்கி, கெளரி லங்கேஷ் போன்ற உத்தமர்களின் உயிரை குடித்தது என காட்டமாக பதிவிட்டுள்ளார். 

காந்தியை படுகொலை செய்ததற்காக மட்டுமல்லாமல், பல்வேறு தாக்குதலின் கீழ் கோட்சேவின் பெயர் பரிந்துரையில் உள்ளது. இதனால் பூனே காவல்துறையினரின் தீவிரவாதிகள் பட்டியலில் கோட்சேவின் பெயரும் இடம்பிடித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

காந்தியைக் கொல்வதற்காக புனேவிலிருந்து பிராமணர்கள், சவார்க்கர் சமூகத்தவர், இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். ஆனால் 5  முறை முயற்சி செய்தும்  கொலை முயற்சி தோல்வியை தழுவியது. நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் காந்தியை கொன்றுள்னனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என குறிப்பிட்டுள்ளார். 

cap

நாதுராம் கோட்சேவை தேசப் பக்தர் என குறிப்பிட்டுள்ள பிரக்யாசிங் தாகூர், தேர்தலை முடித்துவிட்டு இதுகுறித்து விவாதிக்க வரட்டும். நான் அவரை சந்திக்க விரும்புகிறேன். சுதந்திர போராட்டத்தை முறியடிப்பதற்காக நாச வேலைகளில் ஈடுபட்ட பிரிட்டன் அரசுக்கு நாதுராம் ஒரு தேச பக்தர் தான். பிரிட்டனின் தூண்டுதலால்தான் காந்தி படுகொலை செய்யப்பட்டார்” என்றும் துஷார் தெரிவித்துள்ளார். 

கோட்சே இந்து தீவிரவாதி மட்டுமல்ல.. !கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காந்தியின் கொள்ளுபேரன்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மரணம்: பணியின் போது நேர்ந்த விபரீதம்!

அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு...

10,12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதனால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளும் மாநில வாரியாக நடத்தப்படும் பொதுத் தேர்வுகளும் ரத்து...

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி – குஷ்பு ட்வீட்!

ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்ததற்காக தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த...

எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது ஏன்? – செந்தில் பாலாஜி விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அதிமுக முன்னாள்...
- Advertisment -
TopTamilNews