கோடிகளில் சம்பாதிக்கும் லாரி டிரைவர்… சக்ஸஸ் பார்முலா இது தான்!

எல்லோரையும் போலவே எனக்கும் அமெரிக்கா  போகணும்ன்றது கனவா இருந்துச்சு. ஆனா லாரி மட்டும் தான் ஓட்டத் தெரியும்.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல… என்று என்ன தான் நாம் வேதாந்தம் பேசி திரிந்தாலும், பணம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை என்பதனையும் ஒத்துக் கொள்ள தான் வேண்டும். படிக்கும் வயசுல ஒழுங்கா படிச்சிருந்தா இப்போ நானும் பெரிய அலுவலகத்துல லட்சம் லட்சமா சம்பாதிச்சிருப்பேன் என்று விரக்தியில் விட்டத்தைப் பார்த்து பழம்பெருமை பேசுபவர்கள் தான் இன்னும் நிறைய பேர் இருக்கிறோம். ஆனால், உண்மையில் படிப்பிற்கும் பணத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை… உழைக்கத் தயாராக இருந்தால், பல வழிகளிலும் பணம் வரும் என்பதற்கு உதாரணமாய் சட்னம் சிங்கைச் சொல்கிறார்கள்.  பெரிய படிப்பு எல்லாம் கிடையாது. சாதாரண லாரி டிரைவர் தான். படிச்சவங்க எல்லாம் லட்சங்களில் கனவு கண்ட போது, கோடிகளில் ஆசைப்பட்டிருக்கிறார் சட்னம் சிங். 

satnam singh

எல்லோரையும் போலவே எனக்கும் அமெரிக்கா  போகணும்ன்றது கனவா இருந்துச்சு. ஆனா லாரி மட்டும் தான் ஓட்டத் தெரியும். எப்படியாவது அமெரிக்கா போய் லாரி டிரைவராகனும் என்கிற கனவுடன் அமெரிக்காவுக்கும் சென்று செட்டிலாகியிருக்கிறார் சட்னம் சிங். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது யுஎஸ் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார். தற்போது அமெரிக்காவில், செமி-ட்ரைலர் ட்ரக்கை ஓட்டி வருகிறார். அல் ஜசீரா  நியூஸ் நெட்வொர்க், இந்தியரான சட்னம் சிங்கை பேட்டி கண்டது. அப்போது சட்னம் சிங் தனது தினசரி வாழ்க்கை, அமெரிக்க நெடுஞ்சாலைகளில் தனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் விவரித்தார்.  

சட்னம் சிங்

கடந்த 1970களில் தான் சட்னம் சிங் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த சட்னம் சிங், விவசாயம் சார்ந்த வேலைகளை அமெரிக்காவில் செய்து தற்போது ட்ரக் ஓட்டி வருகிறார். ட்ரக்கில் மிக நீண்ட நேரம் பணியாற்றுவேன். கலிபோர்னியா மகாணத்தில் லோடுகளை பிக்கப் செய்வது மற்றும் டெலிவரி செய்வது ஆகிய வேலைகளை ட்ரக் மூலம் அவர் செய்வேன். ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். அவர்களில் நானும் ஒருவன்.

சட்னம் சிங்கிடம், சம்பாத்தியம் குறித்த கேள்வியையும் அந்த ரிப்போர்ட்டர் எழுப்பினார்.  இதற்கு, இயல்பாக வேலை செய்தால், அதாவது ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்தால், ஒரு ஆண்டுக்கு 2,00,000 டாலர்கள் முதல் 2,25,000 டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்கிறார் சட்னம் சிங். இந்திய மதிப்பில் அவருடைய மாத வருமானம் ரூபாய் 13 லட்சம். ஒரு வருஷத்துக்கு 1.57 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார் சட்னம் சிங். இப்போ சொல்லுங்க… கோடிகளில் சம்பாதிக்க படிப்பு முக்கியமில்லை தானே… !

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!