Home உலகம் கொழும்பு, திருவிழா யானைகளுக்கு மதம்பிடித்து மிதித்ததில் 17 பேர் படுகாயம்!

கொழும்பு, திருவிழா யானைகளுக்கு மதம்பிடித்து மிதித்ததில் 17 பேர் படுகாயம்!

யானையை அடக்கமுடியாமல் பாகனும் பின்னாடியே ஓட, எதிர்புறமிருந்து மற்றொரு யானைக்கும் அதேநேரம் மதம்பிடித்து அதுவும் துரத்த, இரண்டு யானைகளுக்கும் இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே கோட்டி என்னுமிடத்தில் புத்த மத திருவிழாவான பெரஹரவுக்காக பக்தர்களும் பொதுமக்களும் திரளாக திரண்டிருந்தனர். செண்டை மேளம் தெறிக்க, மின்விளக்குகள் ஜொலிக்க, வாணவேடிக்கைகள் மிளிர என திருவிழா ஊர்வலம் ஜெகஜோதியாக நடைபெற்றது. கடந்த 600 வருடங்களாக கொண்டாடப்பட்டுவரும் இத்திருவிழாவின் பிரமாண்டத்தை காட்ட இரண்டு யானைகளும் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டன.

Elephant rampage injures 17

செண்டை மேளத்தின் தாளத்திற்கேற்ப யானை நடனமாடவேண்டும் என பாகன் நினைத்தாரோ என்னவோ, தெரியவில்லை, வேகமாக அங்குசத்தால் குத்தியிருக்கவேண்டும். பெருந்திரளான கூட்டம், சப்தம், இரைச்சல் இவற்றுடன் சேர்த்து அங்குசத்தால் குத்தும் வாங்கியதில் கடுப்பான யானைக்கு திடீரென மதம்பிடித்து ஓட ஆரம்பித்துவிட்டது. யானையை அடக்கமுடியாமல் பாகனும் பின்னாடியே ஓட, எதிர்புறமிருந்து மற்றொரு யானைக்கும் அதேநேரம் மதம்பிடித்து அதுவும் துரத்த, இரண்டு யானைகளுக்கும் இடையில் சிக்கி 17 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகிலிருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலா விடுதலை- திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திருப்பத்தூர் சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதை அடுத்து, திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு...

எந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி!

பாஜககாரர்கள் என்றாலே எப்போதுமே எல்லா விசயங்களையும் சற்று வித்தியாசமாக செய்யக் கூடியவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதேபோல எதோ ஒன்றை கூறிவிட்டு, அப்படியே பிளேட்டை தலைகீழாக மாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள்....

அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

வேலூரில் அரசு அதிகாரி ஒருவர் வீட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும், 5 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பெருமுகை...

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!