கொழுப்பு, சர்க்கரை நோயைத் தடுக்கும் சமஸ்கிருதம்! – பா.ஜ.க எம்.பி சொல்கிறார்

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் தொடர்பான பிரச்னைகள் வரவே வராது என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்கிருத பல்கலைக் கழகம் ஏற்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதத்தின்போது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஆங்கிலத்தில் வறுத்தெடுக்கும் ஆ.ராசா கூட இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழில் பேசினார்.

தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொலஸ்டிரால் தொடர்பான பிரச்னைகள் வரவே வராது என்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க எம்.பி பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்கிருத பல்கலைக் கழகம் ஏற்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விவாதத்தின்போது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஆங்கிலத்தில் வறுத்தெடுக்கும் ஆ.ராசா கூட இந்த விவாதத்தில் பங்கேற்று தமிழில் பேசினார்.
இந்த விவாதத்தில் பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ganesh singh

“உலகின் 97 சதவிகித மொழிகள், சில இஸ்லாமிய மொழிகளுக்கும் கூட அடிப்படை சமஸ்கிருதம்தான். தினமும் சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு சர்க்கரை நோய், கொழுப்பு படிவது தொடர்பான பிரச்னை ஏற்படாது என்று அமெரிக்கக் கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமஸ்கிருதம் பேசும்போது அது நம்முடைய நரம்பு மண்டலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி, நோயின்றி வாழத் துணை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டுவந்தால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நாசா கூறியுள்ளது” என்று அடுக்கடுக்காக குண்டுகளை வீசினார்.
மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசும்போது, “சமஸ்கிருதம் மிகவும் நெளிவு சுழிவுகள் நிறைந்த மொழி. ஒரே வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். பிரதர், கவ் (பசு) உள்ளிட்ட பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டவையே. இதுபோன்ற தொன்மையான மொழியை ஊக்குவிப்பது மற்ற மொழிகளை பாதிக்காது” என்றார்.
அமைச்சர் மற்றும் பாரதிய ஜனதா எம்.பி-யின் பேச்சு தற்போது நாடு முழுக்க சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Most Popular

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் வெளியிட்ட ஆர்வலர்கள்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை தமிழில் மொழி பெயர்த்து வழங்க முடியுமா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழில் அதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய அரசு...

“முதலிரவில் முடிந்த வாழ்க்கை”- படுக்கையில் இருந்த காதலர்கள் -தீ வைத்து கொளுத்திய குடும்பத்தினர்கள்-

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கார்ச்சா கிராமத்தில் போலா என்ற 23 வயது வாலிபரும் ,ப்ரியங்கா என்ற 20 வயது பெண்ணும் காதலித்தனர் .ஆனால் அவர்களின் காதலுக்கு அந்த பெண்ணின் வீட்டில் கடுமையான...

‘எஸ்.வி சேகரை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை’.. அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு அளித்தும் முதல்வர் பழனிசாமியை விமர்சித்தும் எஸ்.வி சேகர் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட...

“50 லட்சத்தை 25லட்சமாக குறைத்து முன்களப் பணியாளர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தாதீர்கள் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என...