Home உலகம் கொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்! 

கொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்! 

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் பேராசிரியர் ஜாவேத் பூட்டோ வசித்து வந்தார். பாகிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த பூட்டோ வாஷிங்டனில் மனநல காப்பாகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் பேராசிரியர் ஜாவேத் பூட்டோ வசித்து வந்தார். பாகிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்த பூட்டோ வாஷிங்டனில் மனநல காப்பாகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

cctv

இந்நிலையில் இரவுப்பணி முடிந்து பார்க்கிங்கில் காரை விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பூட்டோவை பின்தொடர்ந்து சென்று தாக்கி, துப்பாக்கியால் சுட்டு ஜோர்டான் கொலை செய்தார். இச்சம்பவம் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அண்டைவீட்டுக்காரர்கள் என்ற போதும் அதிகம் அறிமுகம் இல்லாத பூட்டோவை ஜோர்டான் கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
ஜோர்டானின் வீட்டு பால்கனியில் இருந்து கஞ்சா துர்நாற்றம் தனது வீட்டுக்கு வருகின்றது என்று வீட்டின் உரிமையாளரிடம் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு பூட்டோ புகார் அளித்துள்ளார்.

smoking weed

இதனால் ஆத்திரமடைந்த ஜோர்டான் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலை செய்து விட்டு தனது வீட்டு பால்கனியில் ஒரு ஓரமாக எந்த விதமான பதற்றமும் இன்றி ஜோர்டான் அமர்ந்திருந்ததாகவும் அவரது காலில் சிறிய அளவு ரத்த கறை இருந்ததாகவும் அருகே கஞ்சா பொட்டலங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...
TopTamilNews