Home இந்தியா கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது..... பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு....

கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது….. பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு….

நம் நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் உலகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

மருத்துவ பணியாளர்கள்

நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 525 கொரோனா நோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் இறந்தள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,072ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 485 பேர்.

மருத்துவ பரிசோதனை

இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“அதிகாலையில் வந்த ஆபாச வீடியோ” – கோவா துணை முதல்வர் வாட்ஸ் அப் க்ரூப்பில் அனுப்பிய மர்மநபர்.

பல வாட்ஸ் அப் க்ரூப்புக்ளில் இப்போது பல ஆபாச வீடியோக்கள் உலா வருகின்றன .ஆனால் சமீபத்தில் கோவா துணை முதல்வர் உறுப்பினராக இருக்கும் ஒரு...

வழக்குகளில் பிடிபட்ட வாகன ஏலம்; மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறக்கிறார்!

விராலிமலை ஜல்லிக்கட்டு நினைவு சிலையை முதல்வர் பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில் அவரின் கன்னியாகுமரி உள்ளிட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!