Home இந்தியா கொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம்

கொரோனா வைரஸ் சோதனை செய்ய ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம்

கொரோனா வைரஸ் சோதனை செய்ய முதன்முறையாக தனியார் நிறுவனம் ஒன்றிற்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லி: கொரோனா வைரஸ் சோதனை செய்ய முதன்முறையாக தனியார் நிறுவனம் ஒன்றிற்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்து கட்டுப்பாட்டாளர் டி.சி.ஜி.ஐ யின் ஒப்புதலுக்குப் பிறகு கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான உரிமத்தை சுவிஸ் நிறுவனமான ரோச் டையக்னாஸ்டிக்ஸ் இந்தியா பெற்றுள்ளது. அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களை கொரோனா வைரஸ் குறித்து சோதிக்க அனுமதி வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் பின்னர் இதுபோன்ற அனுமதியைப் பெற்ற முதல் தனியார் நிறுவனம் இதுவாகும்.

ttn

டிரிவிட்ரான் ஹெல்த்கேர் மற்றும் மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன் ஆகிய இரண்டு இந்திய நோயறிதல் நிறுவனங்களும் அவர்கள் உருவாக்கிய கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளுக்காக டி.சி.ஜி.ஐ யிடம் ஒப்புதல் கோரியுள்ளன. கொரோனா வைரஸ் சோதனையைத் தொடங்க விரும்பும் தனியார் துறை ஆய்வகங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதே நேரத்தில் சோதனைகளை இலவசமாக நடத்துமாறு முறையிட்டது.

மாவட்ட செய்திகள்

Most Popular

சென்னைக்கு பார்சலில் கடத்திய ரூ.4.75 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

சென்னை நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட 4.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெதர்லாந்தில் இருந்து...

தேமுதிகவிற்கு 17 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்க அதிமுக ஒப்புதல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் அதிமுக தலைமை, தற்போது தொகுதி பங்கீட்டில் படு பிஸியாக இருக்கிறது. தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20...

“இப்படியே போனா காங்கிரஸ இழுத்து மூட வேண்டியது தான்” – மனம் நொந்து பேசிய ப. சிதம்பரம்!

ஒருகாலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட ஒரு கட்சி இன்று திமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ. கருப்பையா கூறினார். இது எந்தளவுக்கு உண்மை என்பதே...

மதிமுகவிற்கு 6 இடங்களை ஒதுக்கிய திமுக! உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு

தமிழக தேர்தலை முண்ணனி கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இருதரப்பிலுமே இறுதிமுடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு தேமுக...
TopTamilNews