Home தொழில்நுட்பம் கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகை

கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகை

வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

பெங்களூரு: வீட்டிலிருந்தே வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றன. தற்போது அதை ஊக்குவிக்கும் வகையில் பிரபல ஏசிடி பைபர்நெட் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி உச்சபட்ச வரம்பில்லாத அதிவேக இன்டர்நெட்டை மார்ச் 31-ஆம் தேதி வரை பயனர்கள் பயன்படுத்த முடியும். மேலும் நொடிக்கு 300 எம்.பி என்ற வகையில் அதிவேக இன்டர்நெட் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு ஏசிடி பைபர்நெட் வழங்குகிறது.

ttn

ஏசிடி பைபர்நெட் வாடிக்கையாளர்கள் அதன் மொபைல் ஆப்-ஐ லாகின் செய்து செட்டிங்கில் இன்டர்நெட் வேகம் மற்றும் வரம்பு தொடர்பாக அதிகரித்துக் கொள்ளலாம். இந்த அறிவிப்பை ஏசிடி பைபர்நெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட...

இன்று 2,869 பேருக்கு மட்டுமே கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது. 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதி! கவலைகிடம் என தகவல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சேலம் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!