Home சினிமா கொரோனா வைரஸ் எதிரொலி: ரஜினி, கமல் படத்தின் படப்பிடிப்பு ரத்து!

கொரோனா வைரஸ் எதிரொலி: ரஜினி, கமல் படத்தின் படப்பிடிப்பு ரத்து!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ரஜினி, கமல் படத்தின் படப்பிடிப்பு ரத்து!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு 3200 ஐ கடந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் சுமார் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல ஐடி மற்று  தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளன. இதேபோல் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியன் 2

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் வட இந்தியாவில் நடைபெறவுள்ள படப்பிடிப்புகளை படக்குழு திட்டமிட்டுள்லது. இதேபோல்  இந்தியன் 2 படப்பிடிப்பில் சமீபத்தில் நடந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சீனாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்ய லைகா நிறுவனமும், படக்குழுவும் திட்டமிட்டுள்ளது. 

இதேபோன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் திரைப்படத்தின் காட்சிகள் அரபுநாடுகளில் படப்பிடிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த படப்பிடிப்பும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எதிரொலி: ரஜினி, கமல் படத்தின் படப்பிடிப்பு ரத்து!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

வெப் சீரிஸ் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், அந்தப் படங்களைத் தனியாக செல்போன் ஆப் (HotShots) ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது....

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

15 ஆண்டுகளாக போராடியும் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டம் நடத்தியுள்ளனர் பி.என்.டி. காலனி பகுதி மக்கள்.

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...
- Advertisment -
TopTamilNews