Home அரசியல் கொரோனா வைரஸை அழிக்கவே மக்கள் ஊரடங்கை அறிவித்தாரா மோடி? - விபரீத பதிவுகள்

கொரோனா வைரஸை அழிக்கவே மக்கள் ஊரடங்கை அறிவித்தாரா மோடி? – விபரீத பதிவுகள்

கடந்த 19ம் தேதி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய மோடி, ஞாயிற்றுக்கிழமை (22ம் தேதி) பொது மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நகரங்கள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் முடக்கப்பட்டால் மட்டுமே கொரோனா கிருமி பரவும் வாய்ப்பு தடுக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை எச்சரிக்கும்போது மோடியின் அறிவிப்பு எந்த விதத்தில் பயன் தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கவே பொது மக்கள் சுய ஊரடங்கை மோடி அறிவித்ததாக சமூக ஊடகங்களில் பா.ஜ.க-வினர் பரப்பி வருகின்றனர். 
கடந்த 19ம் தேதி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய மோடி, ஞாயிற்றுக்கிழமை (22ம் தேதி) பொது மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நகரங்கள் நாட்கணக்கில், வாரக் கணக்கில் முடக்கப்பட்டால் மட்டுமே கொரோனா கிருமி பரவும் வாய்ப்பு தடுக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்டவை எச்சரிக்கும்போது மோடியின் அறிவிப்பு எந்த விதத்தில் பயன் தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

corona-doctor

ஆனால், பா.ஜ.க ஆதரவாளர்கள் மோடி கொரோனா கிருமியை அழிக்க மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் என்று புளங்காகிதம் அடைந்து வருகின்றனர். “வைரஸ் கிருமி பொது வெளியில் 12 மணி நேரம் வரையில்தான் உயிரோடு இருக்கும். மோடியின் ஊரடங்கு என்பது 14 மணி நேரம். மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும்போது வைரஸ் கிருமி 12 மணி நேரத்தில் அழிந்துவிடும். வைரஸ் பரவும் சங்கிலி சிதைக்கப்படும். 14 மணி நேரத்துக்குப் பிறகு நாடே வைரஸ் இல்லாமல் சுத்தமாகிவிடும்” என்று பரப்பி வருகின்றனர்.

corona-virus-190.jpg

நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின் ஆய்வின் படி 21 முதல் 23 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் அல்லது 40 சதவிகித ஈரப்பதம் உள்ள நிலையில், காற்றில் பரவியுள்ள கொரோனா வைரஸ் மூன்று மணி நேரத்தில் இறந்துவிடும். தாமிரத்தில் படிந்த வைரஸ் கிருமியானது நான்கு மணி நேரம் வரை உயிர் வாழும். அட்டைப் பெட்டி, காகிதத்தில் படிந்த கொரோனா வைரஸ் 24 மணி நேரம் வரை வாழுமாம். ஸ்டெய்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் தங்கிய கொரோனா வைரஸ் 2 – 3 நாட்கள் வரை உயிர் வாழும். பிளாஸ்டிக், மைக்காவில் உள்ள கொரோனா வைரஸ் மூன்று நாட்கள் வரை தாராளமாக உயிர்வாழும்.

corona-spreading-place

நாடு முழுக்க ஒரே மாதிரியான வெப்பநிலை இல்லை. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப வெப்பநிலை மாறுகிறது. ஏடிஎம் மையத்தில் நம்பர் அழுத்தும் பிளாஸ்டிக் மீது ஒரு கொரோனா வைரஸ் தப்பிப்பிழைத்து இருக்கிறது என்றால் அது குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அப்படி இருக்கும்போது 14 மணி நேர மக்கள் ஊரடங்கால் கொரோனாவை என்ன செய்ய முடியும்?
மோடி எதற்காக அறிவித்தார், அது சரியா, தவறா என்று அலசவில்லை. மோடிக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருந்தாலே போதும். இதுவே நீங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் நன்மை. உங்களின் இதுபோன்ற தவறான ஆதரவு பேச்சுக்களை மோடியே விரும்பமாட்டார்!

மாவட்ட செய்திகள்

Most Popular

‘மோடி அரசை துரத்துவது ரொம்ப ஈஸி’ – ராகுல் காந்தி அதிரடி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 ஆவது கட்ட பரப்புரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியிருக்கிறார். நேற்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்த அவர், தூத்துக்குடி வ.உ.சி....

“ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் கொடுங்க ,இன்பமா இருங்க..” -விலைப்பட்டியலோடு விலைபேசப்பட்ட பெண்

16 வயதான பெண்ணின் போட்டோவை, ஊடகத்தில் விபச்சாரியாக சித்தரித்து வெளியிட்ட இன்னோரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு : மத்திய அரசு பகீர் தகவல்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இன்று புதிதாக 16,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும் 113 பேர் கொரோனாவுக்கு...

மீண்டும் இந்தியில் கடிதம்… எழுதிய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி சு. வெங்கடேசன் எம்பி சம்பவம்!

மத்திய கலாச்சார அமைச்சகம் சு. வெங்கடேசன் எம்.பிக்கு இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட மீறல்களைச் செய்தால் களைத்துப் போய் எதிர்ப்பைக் கைவிட்டு விடுவோமென்று நினைக்காதீர்கள்...
TopTamilNews