Home இந்தியா கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 2 ஆயிரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது...

கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 2 ஆயிரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது…

நாடு முழுவதுமாக கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் படுக்கைகளில் 1.5 சதவீத குறைவான படுக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,981ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி விட்டதாகவும், உயிர் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நோயாளியை பரிசோதிக்கும் மருத்துவ பணியாளர்

இந்நிலையில் நாடு முழுவதுமாக கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 1.3 லட்சம் படுக்கைகளில் 1.5 சதவீதத்துக்கும் குறைவான படுக்கைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், லாக்டவுன் சமயத்தில் நாங்கள் திறனை அதிகரித்ததால் எங்களது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக இல்லை. பெரும்பாலான கேஸ்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) லேசானவை மற்றும் மிகச் சிலர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஐ.சி.யூ. மற்றும் ஆக்ஸிஜனுடன் ஒதுக்கப்பட்ட 1.30 லட்சம் படுக்கைகளில் தற்சமயம்  ஆயிரம் முதல் 2 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த்

நாட்டின் மொத்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 64 சதவீத பங்கினை டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் கொண்டுள்ளன. அதிலும் டெல்லி, புனே, மும்பை மற்றும் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களும் 50 சதவீத பங்கினை கொண்டுள்ளன என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப காந்த் தெரிவித்தார். டெல்லி முழுவதும் மற்றும் மும்பையின் அனைத்து பகுதிகளும் ஆய்வுக்காக தலா ஒரு மாவட்டமாக கருதப்படுகிறது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெ. நினைவிடத்திற்கு தொண்டர்களை அழைத்து செல்ல தனி ரயிலை பதிவு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ!

சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை, நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவை...

மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையை விசிக கண்டிக்கிறது- திருமா

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர், “வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் இத்தனை நாள் போராட்டம் என்பது ஒரு யுக புரட்சி. உலகமே இந்த போராட்டத்தைக்...

“விவசாயிகள் பேரணி வன்முறையானதுக்கு பாஜகவும் அதிமுகவும் தான் காரணம்” – ஸ்டாலின் கண்டனம்!

வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு உதவிடும் என்பதால் அமைதி வழியில் தீர்வு காண விவசாயிகள் முயல வேண்டும் என மு.க. ஸ்டாலின் டெல்லி விவசாயிகள் பேரணி குறித்து கூறியுள்ளார்....

நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி நான்கு ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்த நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார். இந்தத் தகவலை சிறைத் துறை நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!