Home இந்தியா கொரோனா தடுப்பு பணிக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி!

கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு நாட்டு மக்கள் நன்கொடை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதற்காக PM CARES என்ற பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதனையடுத்து பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு நன்கொடை வாரி வழங்கி வருகின்றனர்.பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரண (PM CARES) நிதியத்துக்கு நன்கொடை வழங்க ஆர்வமாக உள்ள குடிமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் pmindia.gov.in என்ற இணையதளத்தை லாகின் செய்து நிதி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு பணிக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி!

wipro

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் மனித வாழ்வாதார நெருக்கடியை சமாளிக்க விப்ரோ நிறுவன குழுமம் 1,125 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. விப்ரோ குழுமத் தலைவர் அசிம் பிரேம்ஜியின் அறக்கட்டளை சார்பாக 1000 கோடி ரூபாயும், விப்ரோ குழுமம் 100 கோடி ரூபாயும் விப்ரோ என்டர்பிரைசஸ் சார்பில் 25 கோடியும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சமூக நலத் திட்டங்களுக்கு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய சிஎஸ்ஆர் நிதிக்கு அப்பாற்பட்டு இந்த நிதியுதவியை விப்ரோ அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மீண்டும் குறையும் கொரோனா : சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில்...

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டி: பெல்ஜியத்திடம் போராடி இந்திய அணி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் தோல்வியை தழுவியது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று காலை...

“அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலை” – டிடிவி தினகரன்

மாவீரன் தீரன் சின்னமலை 216ம் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756ல்...

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

புதுச்சேரியில் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பின்...
- Advertisment -
TopTamilNews