Home தமிழகம் கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது... வளசரவாக்கத்தில் சுத்தமான மைதானம்! 

கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது… வளசரவாக்கத்தில் சுத்தமான மைதானம்! 

கொரோனா காரணமாக நாடே ஊரடங்கில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சில நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. கங்கை உள்ளிட்ட நதிகள் மாசு குறைந்து குடிக்கும் அளவுக்கு மாறியுள்ளது. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளது. விலங்குகள் சுதந்திரமாக தங்கள் வாழ்விடத்தில் இருக்கின்றன.

கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது... வளசரவாக்கத்தில் சுத்தமான மைதானம்! 

கொரோனா காரணமாக நாடே ஊரடங்கில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சில நல்ல விஷயங்களும் நடந்து வருகின்றன. கங்கை உள்ளிட்ட நதிகள் மாசு குறைந்து குடிக்கும் அளவுக்கு மாறியுள்ளது. டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளது. விலங்குகள் சுதந்திரமாக தங்கள் வாழ்விடத்தில் இருக்கின்றன. இயற்கை கொஞ்சம் தன்னுடைய பழைய நிலைக்குத் திரும்ப முயற்சித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் கொரோனா காரணமாக தெரு ஒன்று மூடப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகள் கழித்து அந்த பகுதியை சுத்தப்படுத்த உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தீமையிலும் ஒரு நன்மை என்று நெட்டிசன் ஒருவர் இதைப் பற்றி விவரித்துள்ளார்.

valasai-789

Saravanan Savadamuthu என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்றைக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் மெயின் ரோட்டில் இருக்கும் அபார்ட்மெண்ட்டில் வைரஸ் கண்டறியப்பட்டவரிடம் “எங்கெங்கு சென்றீர்கள்..” என்று கேட்டபோது சமர்த்துப் பையனாக நேற்றுவரையிலும் திறந்திருந்த அருகாமை கடைகள் அனைத்தையும் கை காட்டிவிட்டாராம். 
“மூடுங்கடா அத்தனையையும்..” என்று உத்தரவிட்டுவிட்டார்கள். அதோடு கடைக்காரர்களையும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்களாம்.
இருந்ததே 2 மளிகைக் கடைகள், 2 மட்டன் கடைகள், 1 மெடிக்கல் ஷாப்.. இந்த ஐந்துமே இன்று முதல் குளோஸ்டாம்.
பக்கத்து தெருவான முரளி கிருஷ்ணா நகர் பிரதான சாலையில் இரண்டு மளிகைக் கடைகள் இருந்தன. அதில் ஒன்றையும் 11 மணியோடு மூடச் சொல்லிவிட்டார்கள். மீதமிருக்கும் ஒரேயொரு கடை மட்டுமே திறந்துள்ளது. கூட்டம் வாசலில் அள்ளுகிறது.
இந்தப் பக்கம் அந்த இளைஞனின் அபார்ட்மெண்ட்டுக்கு எதிரில் இருந்த மெடிக்கல் ஷாப் ஓனர் இந்த நேரத்தில் பழம், காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்தால் காசு கொட்டுமே என்றெண்ணி தனது நண்பர் ஒருவருக்கு கடை வாசலில் இடம் கொடுத்து காய்கனி கடையை திறந்து வைத்திருந்தார். அந்தக் கடையும் இப்போது குளோஸ்.. பாவம்.. அவர்.. கோயம்பேட்டில் இருந்து வாங்கி வந்ததையெல்லாம் அப்படியே மொத்தமாய் கட்டி கொண்டு போனார்.
இப்போது நான் வசிக்கும் தெரு ஹாட்ஸ்பாட்டில் சிக்கிக் கொண்டது. ஒரேயொரு சின்ன சந்தினை மட்டும் திறந்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத்தான் போய் வந்து கொண்டிருக்கிறோம்..

valasai-780

இதனால் ஒரேயொரு பிரயோசனம்தான்.. என் வீட்டுக்கு நேர் பின்புறம் ஒரு பொட்டல் வெளி பிரதேசம் உள்ளது. அந்த இடத்தின் உரிமையாளர் காம்பவுண்ட் சுவரைக் கட்டிவிட்டு அதற்குக் கதவு போட்டு பூட்டும்போட்டுவிட்டு சென்றிருக்கிறார்.
என் வீட்டு பின்பக்க ஜன்னலைத் திறந்தால் கொசுப் படையுடன், நாற்றமும் சேர்ந்தே வரும்.. கடந்த பல வருடங்களாக அந்த இடம் அப்படியேதான் புதர் மண்டி போய் கிடந்தது. பகலில் அக்கம் பக்கத்து பையன்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். ராத்திரியில் நிலா வெளிச்சத்தில் சில இளைஞர்கள் நெடுநேரம் சரக்கடிப்பார்கள். இப்போது அந்த இடத்தில் இருந்த வருடக்கணக்கான குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கெட்டதிலும் ஒரு நல்லது..!” என்று கூறியுள்ளார்.

 

கொரோனா கெட்டதிலும் ஒரு நல்லது... வளசரவாக்கத்தில் சுத்தமான மைதானம்! 
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...
- Advertisment -
TopTamilNews