Home தமிழகம் கொரோனா எதிரொலி: மார்ச் 31 ஆம் தேதி 5ஆம் வகுப்பு வரை விடுமுறை- தமிழக அரசு 

கொரோனா எதிரொலி: மார்ச் 31 ஆம் தேதி 5ஆம் வகுப்பு வரை விடுமுறை- தமிழக அரசு 

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி  இந்தியாவிலும் பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி  இந்தியாவிலும் பாதிப்புக்களை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் அறிவுறுத்தி வருகின்றன.

statement

மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவற்றை மூடும் படி கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதால் டெல்லி, பீகார், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை

இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட கேரளா தொடர்புடைய மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை மேற்கொண்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews