மக்களை இதிலிருந்து காப்பாற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ள நிலையில், மக்களை இதிலிருந்து காப்பாற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்கவும், தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் டெலிகவுன்சிலிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் என 400க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தினமும் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்தும் அத்தியாவசிய தேவைகள் குறித்தும் டெலி கவுன்சிலிங் குழு கேட்டறியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவையை தொடர்பு கொள்ள வேண்டியவர்கள் 0421- 2240153 என்ற எண்ணில் அழைக்காலம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.