கொடைக்கானலில் சுற்றுலா தளங்கள் திறப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

தமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது.

தமிழகத்தில் பருவமழை கடந்த 17 ஆம் தேதி தொடங்கியதையடுத்து மழை ஆங்காங்கே வெளுத்து வாங்குகிறது. தென் மேற்கு வங்கக்கடல், மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் கடந்த 22 ஆம் தேதி (நேற்று) தமிழகத்தில் உள்ள கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ விடுத்தது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் 22 மற்றும் 23 ஆம் தேதி மூடப்போவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. 

Kodaikanal

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு விடுத்த ‘ரெட் அலெர்ட்’ ஐ திரும்பப்பெற்றதால் 23 ஆம் தேதி, அதாவது இன்று அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

Most Popular

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....

அடுத்த ஆண்டு இந்தியாவில் டி 20 உலகக்கோப்பை- ஐசிசி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என தெரியாததால் எதிர்வரும்...