கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் போவேன் – எஸ்.வி.சேகர்

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்தோடு அங்க போய் செட்டில் ஆகிவிடுவேன் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்தோடு அங்க போய் செட்டில் ஆகிவிடுவேன் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் காவல்துறையினருக்கு டிமிக்கிக் கொடுத்துவரும் நித்தியானந்தா அவ்வப்போது யூடியூபில் தலைக்காட்டி பிரசங்கம் என்ற பெயரில் ஏதாவது உளறிக்கொண்டிருக்கிறார். சர்ச்சை சாமியார் நித்தியானாந்தாவை வரும் 18 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Nithyananda

இந்நிலையில் நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கைலாசா நாடு இருப்பது உண்மையே. நான் யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு நித்தியானந்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. உண்மையில் டிக்கெட் கொடுத்தால் கைலாசாவுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன். ஆகில இந்திய சன்னியாசிகள் சங்கதலைவராக நித்தியானந்தா இருப்பதால் அவரை கைது செய்ய வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி கைலாசாவில் ஓரினச் சேர்க்கை, திருமணத்தை மீறிய உறவு உள்ளிட்ட 11 பாலியல் செயல்பாடுகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி இருப்பது எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார். 

Most Popular

“நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?”- தங்கையை காதலித்த வாலிபரை வீடு புகுந்து கொலை செய்த அண்ணன்

"நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டியா?" என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தங்கையின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் வாலிபர். இந்த சோக சம்பவம் தேவகோட்டையில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

விமானப்படையின் உதவியை நாடினார் கேரள முதல்வர்; என்ன காரணம்?

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரள மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இன்று காலை திடீரென...

மதுரை உலைப்பட்டியில் தொல்லியல் ஆய்வு வேண்டும்! – சீமான் கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டியில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளதால் அங்கு விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

சாதித்த இ.பி.எஸ் அரசு: 3 ஆண்டுகளாக தேசிய விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் உள்ளது என்று பொருளாதார நிபுணர்கள்...