Home சினிமா கேவலமான சிரிப்பு: கீர்த்தி சுரேஷை சீண்டும் ஸ்ரீரெட்டி!

கேவலமான சிரிப்பு: கீர்த்தி சுரேஷை சீண்டும் ஸ்ரீரெட்டி!

‘ஸ்ரீலீக்ஸ்’ சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி, நடிகை கீர்த்தி சுரேஷின் சிரிப்பை வைத்து அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

ஹைதராபாத்: ‘ஸ்ரீலீக்ஸ்’ சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி, நடிகை கீர்த்தி சுரேஷின் சிரிப்பை வைத்து அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தெலுங்கு நடிகர்கள் சங்க அலுவலகம் முன்பு ஆடையை களைத்து அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.

srireddy

இந்நிலையில் பாலியல் புகார் தெரிவிப்பதற்கு சமீப காலமாக பிரேக்விட்டுள்ள ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் –தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷை சீண்டியுள்ளார். சமீபத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

sandakozhi

விஷாலின் 25வது திரைப்படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்துக் கொண்டு பேசிய விஷால், ஸ்ரீரெட்டிக்கு தமிழில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது நல்ல விஷயம். இனி அவருடன் நடிக்கையில் அனைவரும் உஷாராக இருப்பார்கள். ஏனெனில் அவர் பாதுகாப்புக்காக கேமரா வைத்துக் கொள்வார் என்று நக்கலாக பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்துள்ளார்.

keerthyuresh

கீர்த்தி சுரேஷின் சிரிப்பால் கடுப்பான ஸ்ரீரெட்டி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீர்த்தியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘கீர்த்தி சுரேஷ் உங்க சிரிப்பு கேவலாமா இருக்கு. கவலைபடாதீங்க மேடம். நீங்க எப்பவும் உயரத்துலயே இருக்க முடியாது. ஒரு நாள் பாதிகப்பட்டவங்களோட வலி உங்களுக்கு புரியும். உங்க சிரிப்ப நான் மறக்கவே மாட்டேன். ஞாபகம் வச்சிக்கோங்க.. நீங்க இப்ப ஆகாயத்துல பறந்துட்டு இருக்கீங்க..’ என்று பதிவிட்டுள்ளார்.

விஷாலின் பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தபோது, கீர்த்தியை மட்டும் ஸ்ரீரெட்டி ஏன் டார்கெட் செய்கிறார் என்று கீர்த்தி சுரேஷின் ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘அப்பாடா… ஒரு வழியாக இறங்கி வந்தார் ட்ரம்ப்’ – அமெரிக்க நிலவரம்

 நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தகில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயக் கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன்...

நிவர் புயல் எதிரொலி – செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் அதிகரிப்பு

சென்னை நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று அலைகள் அதிகரித்து காணப்பட்டது.

காற்று பலமாக வீசியதால் இந்தியாவில் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்!

நிவர் புயல் குறித்த அப்டேட் செய்திகள் வந்துகொண்டே உள்ளன. நாளை இப்புயல் காரைக்கல் – மாமல்லபுரம் இடையே கரை கடக்கும் என தெரிகிறது. இதனால், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு...
Do NOT follow this link or you will be banned from the site!