Home இந்தியா கேரள பாஜக தலைவரானார் சுரேந்திரன்! ம.பி., சிக்கிமிற்கும் தலைவர்கள் நியமனம்!! அப்ப தமிழ்நாடு? 

கேரள பாஜக தலைவரானார் சுரேந்திரன்! ம.பி., சிக்கிமிற்கும் தலைவர்கள் நியமனம்!! அப்ப தமிழ்நாடு? 

கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக  கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

கேரள பாஜகவின் இடைக்காலத் தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் ஜெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இரு மாநிலங்களுக்கும் பாஜக தலைவர்கள் நியமிக்கப்படாமலிருந்த நிலையில்  கே. சுரேந்திரனை கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக நியமித்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.  சுரேந்திரனின் பேச்சுக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அந்த அளவும் பேச்சாற்றலில் சாமர்த்தியம் படைத்தவர். 

k surendran

கோழிக்கோடு மாவட்டம், உளியேறியில் பிறந்தவர் சுரேந்திரன், மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியிலும், இடைத் தேர்தலில் கொன்னி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதேபோல் மத்திய பிரதேச பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா, தல் பகதூர் சவுகான் சிக்கிம் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு வந்த தலைவர் பொறுப்புக்குறித்து கூறிய சுரேந்திரன், பாஜக தலைமை என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் அளவிற்கு சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

சிறுமியின் மார்பகத்தை ஆடைக்குமேல் பிடித்தால் அது குற்றம் ஆகாதா? ஜெயலலிதா செய்ததை இந்தியா செய்யுமா? ரவிக்குமார் எம்.பி. கேள்வி

ஆடையை கழற்றி தோலுடன் தோல் டச் ஆனால்தான், அதன் பின்னர் மார்பை பிடித்து தொட்டிருந்தால்தான் அது பாலியல் நோக்கத்துடன் நடந்த செயல். ஆடையை அகற்றாமல், தோலுடன் தோல் படாமல் (Without...

‘உங்க அரசியல் லாபத்திற்கு நாங்க பலிகடாவா?’ – ஜெயலலிதா நினைவிட திறப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படும் மாணவர்கள்?

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் கூட்டங்களுக்கு காசுக்கு ஆள் பிடிப்பதைப் போல ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு...

காய்ச்சலுக்கு ஊசிபோட்ட இளைஞர் பலியான விவகாரம்… தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சீல்…

விருதுநகர் ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். விருதுநகர்...

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் : டிடிவி தினகரன் கண்டனம்!

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "டெல்லியில்...
Do NOT follow this link or you will be banned from the site!