Home தொழில்நுட்பம் கேரளா வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளுக்கு கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதியுதவி

கேரளா வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளுக்கு கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதியுதவி

கொச்சி: கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளுக்கு கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதியுதவி

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் கடும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ள நீர் பல்வேறு இடங்களில் இன்னமும் வடியாததால் அவர்கள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை பல்வேறு தரப்பினரும் வழங்கி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழையின் அளவு சற்று குறைந்துள்ளதால் கேரள மாநிலத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள்.ஓஆர்ஜி (Google.org) மற்றும் கூகுளர்ஸ் (Googlers) சார்பில் ஒரு மில்லியன் டாலர்கள் கேரளாவுக்கு வழங்கப்படும் என கூகுள் தெற்காசியா மற்றும் இந்தியாவுக்கான துணை தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவியாக கூகுள் பேரிடர் மீட்பு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கேரளா வெள்ள நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளுக்கு கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதியுதவி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பப்ஜி விளையாட வேண்டாமென கண்டித்த பெற்றோர்; ஆற்றில் குதித்து மாணவன் தற்கொலை!

ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அப்பட்டமா நடிக்காதீங்க” – அண்ணாமலை உண்ணாவிரதத்தை கலாய்த்த திருமாவளவன்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக ஓரணியில் இருக்கின்றனர். அனைவருடைய குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. ஆனால் தமிழக பாஜகவின் நிலை தான் பரிதாபத்தில் இருக்கிறது. ஏனெனில் கர்நாடகாவில் ஆள்வது...

குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்!

திருப்பூர் திருப்பூரில் குடும்ப தகராறில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் திலகர்...

“ஆதாரம் இல்லை; ஆனால் உண்மை வெளிவர வேண்டும்” – பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் உச்ச நீதிமன்றம் கருத்து!

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என ஜனநாயகத்தின் குரலாய் ஒலிக்கும் பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டை...
- Advertisment -
TopTamilNews