Home அரசியல் கேரளா, ஆந்திரா, டெல்லியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்

கேரளா, ஆந்திரா, டெல்லியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பேரிடர்நாடு முழுமைக்கும் ஒரு நெருக்கடியான நிலையையும், அசாதாரணச் சூழலையும் உருவாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமாய் முடக்கிப் போட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்புப்பணிகள் பாராட்டுக்குரியது, எனினும் நோயின் தீவிரத்தை தாக்கத்தையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலிகளையும் மற்ற இடங்களில் பார்க்கும் போது இன்னும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு அரசு துரிதமாக செயல்படவேண்டும்.

கேரளா, ஆந்திரா, டெல்லி மாநில அரசுகள் கொரோனா காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”
“கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பேரிடர்நாடு முழுமைக்கும் ஒரு நெருக்கடியான நிலையையும், அசாதாரணச் சூழலையும் உருவாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமாய் முடக்கிப் போட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்புப்பணிகள் பாராட்டுக்குரியது, எனினும் நோயின் தீவிரத்தை தாக்கத்தையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலிகளையும் மற்ற இடங்களில் பார்க்கும் போது இன்னும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு அரசு துரிதமாக செயல்படவேண்டும்.

corona-virus-kerala

அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு சமூக முடக்கத்தால் அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முழுமையாக வாழ்விழந்து நிர்க்கதியற்று நிற்கின்றனர். அன்றாடம் தாங்கள் செய்யும் வேலைகள் மூலமாகவே வருவாயைப் பெற்று அதனைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த அவர்களது வாழ்வாதாரம்தான் இப்பேரிடர் காலத்தில் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. சிறிய வருமானத்தைக்கொண்டு அன்றைக்கு வயிற்றை நிரப்பி வந்த அவர்கள் தற்காலத்தில் உணவுக்கே வழியில்லாது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களது பசிப்பிணியைப் போக்கவேண்டியதும், அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டியதும் அரசின் தலையாயக் கடமையாகிறது.

coronavirus-kerala-98

அண்டை மாநிலமான கேரளாவில் அமைப்புசாரா தொழிலாளர்களைக்காக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் அம்மாநில அரசு எண்ணற்ற திட்டங்களையும், ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளையும் வகுத்து அதனைச் செயலாக்கம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் அவர்களுக்கு நிவாரணத் தொகையும் அறிவித்துள்ளது. அதனைப்போலவே, தமிழக அரசும் செய்திட முன்வரவேண்டும் என்பதுதான் தற்போது அனைவரது எதிர்பார்ப்பாகவும், முதன்மைக் கோரிக்கையாகவும்இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு சீரிய கவனமெடுத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவும், அவர்களது வாழ்வாராதரத்தை உறுதிப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும்.

giving-food-8

மேலும் சாலைகளில் வாழும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பிச்சையெடுத்துவாழ்வோர், வீடற்ற திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் என யாவரையும் அரவணைத்து அவர்களுக்கான தங்குமிடத்தையும்,உணவையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தப்பேரிடர் காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,காவல் துறையினர் உள்ளிட்ட தியாக வீரர்களுக்கும் அவர்தாம் குடும்பிகளுக்கும் தமிழக அரசு பாதுகாப்பான உணவு, போக்குவரத்து , பரிசோதனை உள்ளிட்ட வசதிகளையும் அவர்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்திடும்வண்ணம் ஊக்கத்தொகையும் அளித்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஸ்டாலின் என்ன புலன்விசாரணை விஜயகாந்தா? அமைச்சரின் கேள்வி

பரபரப்பான ஆட்டோ சங்கரின் வழக்கினை மையமாக கொண்டு ஆர்.கே.செல்வமணி எடுத்த படம் ‘புலன் விசாரணை’. விஜயகாந்த் அப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் விஜயகாந்த் அணிந்திருக்கும் கோட் போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை!

தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பொதுமக்கள்...

மாரடோனா இறுதி ஊர்வலம் – இருபுறமும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

கால்பந்தின் கடவுள் எனப் போற்றப்படுபவர் மாரடோனா. அவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முதன் நாள் இரவு இறந்தார். இந்த அதிர்ச்சியை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 21...

மாட்டுவண்டியில் பயணித்து பாரம்பரியத்தை பறைசாற்றிய புதுமண தம்பதியர்

ஈரோடு ஈரோட்டில் புதுமண தம்பதியர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தது, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
Do NOT follow this link or you will be banned from the site!