Home அரசியல் கேரளாவே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்துக்கு அவசரம் தேவையா? - ராமதாஸ் கேள்வி

கேரளாவே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்துக்கு அவசரம் தேவையா? – ராமதாஸ் கேள்வி

கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்திய கேரளாவே மது விற்பனையை ஊரடங்கு முடியும் வரை தொடங்குவது இல்லை என்று முடிவெடுத்திருக்கும்போது தமிழக அரசுக்கு இவ்வளவு அவசரம் தேவையா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்திய கேரளாவே மது விற்பனையை ஊரடங்கு முடியும் வரை தொடங்குவது இல்லை என்று முடிவெடுத்திருக்கும்போது தமிழக அரசுக்கு இவ்வளவு அவசரம் தேவையா என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிவடையாத நிலையில் தமிழக அரசு மே 7ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. முதலில் மாநிலம் முழுக்க திறக்க உத்தரவிட்ட தமிழக அரசு திடீரென்று சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கடைகள் திறக்க தடை என்று அறிவித்தது. கடையைத் திறப்பதற்கு முன்பு மது பாட்டில்களின் விலையை உயர்த்தியது. அரசு நிதானத்தில்தான் உள்ளதா என்ற கேள்வியை இந்த அறிவிப்புகள் எழுப்பின.

liquor-shops-34

இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “மதுக்கடைகள் திறக்கப்பட்டால் வீடுகளில் உள்ள மக்களின் கவனம் மது விற்கும் சாலைகளை நோக்கித் திரும்பும் என்பதால் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்க கேரளம் தடை  விதித்திருக்கிறது. கொரோனாவை கிட்டத்தட்ட ஒழித்துவிட்ட கேரளமே கட்டுப்பாடு காக்கும் போது தமிழகத்தில் இவ்வளவு அவசரம் தேவையா?

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா அரக்கன் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மது அரக்கனும் களத்தில் குதித்து வீதிகளுக்கு வந்து சதிராட்டம் ஆடத் தொடங்கினால் அனைத்து தரப்பு மக்களின் நிலை என்னவாகும்? கொரோனாவிடமிருந்து அவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?

வாரக் கணக்கில் வறுமையின் உச்சத்தைத் தொட்டு வந்த நிலையில், போதையை மறந்து மக்கள் தெளிந்து வரும் நிலையில், தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்தால் ஏழைக் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? குடும்பத் தலைவியின் தாலியும், தட்டுமுட்டு சாமான்களும் எங்கே போகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு’ : திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி பேட்டி!

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் சேர்ப்பில் முறைகேடு நடந்திருப்பதாக ஆர் எஸ் பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் ஆணையம்...

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

ராமநாதபுரம் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில்...

என்னை விட்டுடுங்க… கையெடுத்து கும்பிட்ட ரஜினி

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என்றும், கருணாநிதிக்கு பிறகு திமுக தத்தளிக்கும் என்றும் தப்பு கணக்கு போட்டுத்தான் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்குது என்று சொன்னார் ரஜினி....

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பை தொடர வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிரானைட் முறைகேடு தொடர்பாக வழக்கை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரித்தது. விசாரணையின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்த சகாயம், கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு பல கோடி ரூபாய்...
Do NOT follow this link or you will be banned from the site!