Home இந்தியா கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு 

கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு 

கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து கேரளாவில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை என்றும் மாவட்டம், மாநிலத்தை விட்டு பேருந்து செல்ல தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை உயர்த்தவும் கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பினராயி விஜயன்

இதேபோல் கேரள மாநிலத்தில் 50% வணிக வளாகங்களை சுழற்சி முறையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏசியை பயன்படுத்தாமல் சலூன் கடைகள், அழகு நிலையங்களை திறக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் சலூன் கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...

விளக்கெண்ணெய் குளியல் : அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

பொதுவாக குளியலுக்கு பயன்படுத்தப்படுவது நல்லெண்ணெய். உடல் சூட்டை தணிக்க நல்லெண்ணெயை நன்றாக தேய்த்துக் கொண்டு, ஊற வைத்து விட்டு குளிர்ப்பார்கள். ஆனால்? இது என்ன விளக்கெண்ணெய் குளியல்? கசப்புத் தன்மையுடன்...

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளும் கமல்

அரசியல் காரணங்களால் கருணாநிதியின் உடலுக்கு ஸ்ரீபிரியா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் வந்து அஞ்சலி செலுத்தியதோடு சரி, இறுதிச்சடங்கில் கூட கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. ’’கட்சிக்கு அப்பாற்பட்ட உறவு எங்களுடையது. நாட்டுக்கு ஒரு...

நெல்லை அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு

நெல்லை நெல்லை அருகே சாலையில் நடந்துசென்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெல்லை மாவட்டம்...
TopTamilNews