கேரளாவில் தொடரும் பள்ளிக்கூட பாம்புக்கடி! – பாம்பு பிடிபட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி

கேரளாவில் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பாம்பு கடி பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாம்பு பிடிபட்டது பெற்றோர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கேரளா மலைப்பாங்கான மாநிலம் என்பதால், பாம்புகளுக்கு பஞ்சம் இல்லை. இந்த நிலையில் வயநாடு பகுதியில் பள்ளி ஒன்றில் பாம்பு கடித்ததில் 10 வயது சிறுமி கடந்த வாரம் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளாவில் பள்ளிக்கூட மாணவர்கள் தொடர்ந்து பாம்பு கடி பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பாம்பு பிடிபட்டது பெற்றோர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கேரளா மலைப்பாங்கான மாநிலம் என்பதால், பாம்புகளுக்கு பஞ்சம் இல்லை. இந்த நிலையில் வயநாடு பகுதியில் பள்ளி ஒன்றில் பாம்பு கடித்ததில் 10 வயது சிறுமி கடந்த வாரம் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சோகம் மறைவதற்குள்ள வேறு ஒரு பள்ளிக்கூடத்தில் சிறுவன் ஒருவனை பாம்பு கடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl

கேரள மாநிலம் சாலக்குடி பகுதியில் உள்ள கார்மெல் சி.எம்.ஐ மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான் ஜெரால்ட் என்ற சிறுவன். அவனது காலில் பாம்பு கடித்தது என்று உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு எந்த வகை பாம்பு என்று கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம் என்று கூறி பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். வயநாடு சம்பவம் போல் ஆகிவிடக்கூடாது என்று அவசர அவசரமாக அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனுடைய ரத்தத்தை பரிசோதித்தபோது ரத்தத்தில் பாம்பு விஷம் கலக்கவில்லை என்பது தெரிந்தது. 
சிறுவன் அனுமதிக்கப்பட்ட அறை வாசலிலேயே பெற்றோர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் என அனைவரும் திரண்டு நின்றனர். சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறிய பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

snake

இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் பாம்பு கடிக்கும் சம்பவம் பற்றி அவ்வப்போது செய்தி வருவதால், பள்ளிகளில் பாம்பு ஏதேனும் உள்ளதா, பாம்பு வசிப்பதற்கு ஏதுவான சூழல் நிலவுகிறதா என்று கண்டறிந்து அவற்றை அழித்து, பாதுகாப்பை உறுதி செய்யும்படி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒளரி என்ற இடத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பள்ளிக்கூட புத்தக அறையில் பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவே பெற்றோர் அச்சப்படும் நிலை அங்கு ஏற்பட்டு வருகிறது.

Most Popular

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி லாபம் ஈட்ட முயன்ற பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை...

’இந்த லிஸ்ட்டில் நானா?’ கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் ஆச்சரியம் – டாப்ஸி பெருமை!

ஆண்கள் மட்டுமே கோலோச்சிய வந்த கிரிக்கெட் உலகத்தில் ஒரு பெண் சட்டென்று எல்லோரின் பார்வையையும் தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் மிதாலி ராஜ். ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் எப்படி கருதப்பட்டரோ அதற்கு...

கொரோனா காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி மனு!

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு...

“வாஷிங் மெஷின் போல ஏடிஎம் மெஷினை அடிக்கடி தூக்கி செல்லும் கூட்டம் ” -இந்நிலை நீடித்தால் இனி ஏடிஎம் மெஷின்ல காசுக்கு பதில் காத்துதான் வரும்.

தென்மேற்கு டெல்லியில் உள்ள ராஜோக்ரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு ஏடிஎம் மெஷினை அடையாளம் தெரியாத இருவர் தூக்கி சென்றனர் .அந்த மெஷினில் மொத்தம் 18 லட்ச ரூபாய் பணம்...