Home தமிழகம் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் – மக்கள் அவதி

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் – மக்கள் அவதி

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால் தமிழகத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை: கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் செய்து வருவதால் தமிழகத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான நகரங்களில் வசித்து வரும் மக்கள் கேன் குடிநீரை நம்பியே தங்கள் வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். அதிலும் தற்போது இந்த கேன் குடிநீர் பயன்பாடு கிராமங்கள் வரை பரவி வருகிறது. பருவ மழை பொய்த்ததால் கிராமங்களில் உள்ள கிணறுகள், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது.

ttn

பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் ராட்சத மோட்டார் பொருத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் வாட்டர் விற்பனை செய்கின்றனர். இதனால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 300 முதல் 500 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீர் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. சட்டவிரோதமாக செயல்படும் கேன் குடிநீர் நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். அதனால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

”பெருநிறுவனங்கள் வங்கி தொடங்கினால், ஆர்பிஐ கண்காணிக்க வேண்டும்” – கே.வி.காமத் வலியுறுத்தல் !

இந்தியாவில் பெரு நிறுவனங்களை வங்கித் துறையில் இறங்குவது வரவேற்கத்தக்கது என வங்கித் துறையில் முக்கிய தலைவரான கே.வி.காமத் கூறியுள்ளார். அதேநேரத்தில், கார்பரேட் வங்கிகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணிக்க...

தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தென்காசி தென்காசி மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் தம்பதி அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த...

100 அடி உயரத்தில் போராட்டம் நடத்தும் குடும்பம்

100 அடி உயர நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி நின்று ஒரு குடும்பமே போராடி வரும் விவகாரம் நெல்லை மாவத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விவசாய மசோதாக்கள்- கங்கையைப்போல தூய்மையான நோக்கம் கொண்டது – பிரதமர் வாக்குறுதி!

டெல்லியில் போராடும் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். வேளாண்மை சட்டங்கள் குறித்து அடிப்படை...
Do NOT follow this link or you will be banned from the site!