Home இந்தியா கூரையை பிய்த்து கொடுத்த தெய்வம் ! 60 ரூபாயில் கோடீஸ்வரன் ஆன கூலித் தொழிலாளி !

கூரையை பிய்த்து கொடுத்த தெய்வம் ! 60 ரூபாயில் கோடீஸ்வரன் ஆன கூலித் தொழிலாளி !

மேற்கு வங்க மாநிலத்தில் 60 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்கியவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து அவர் பாதுகாப்பு கேட்டு போலீசை நாடியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 60 ரூபாய் கொடுத்து லாட்டரி வாங்கியவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து அவர் பாதுகாப்பு கேட்டு போலீசை நாடியுள்ளார்.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். தெய்வம் கொடுக்கிறதோ இல்லையோ சில சமயங்களில் லாட்டரி நிறுவனங்கள் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன.

மேற்குவங்க மாநிலம் கல்னா பகுதியை சேர்ந்த இந்திர நாராயண் என்பவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இவர் சமீபத்தில் நாகாலாந்து மாநில லாட்டரி சீட்டுகளை 60 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். அந்த லாட்டரி சீட்டுக்கு தற்போது ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இந்த தகவலை கேட்ட நாராயணன் முதலில் நம்பவில்லை பின்னர் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார். அன்றாடம் கூலித் தொழில் செய்து 5 ரூபாய் பத்து ரூபாய் கிடைக்குமா என்று பார்ப்பவர்களுக்கு திடீரென ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் இன்பத்துடன் பயமும் வரும். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயப்படுகிறார். யாராவது நம்மை தாக்கி லாட்டரி சீட்டை பிடுங்கி கொள்வார்களோ என்ற பயம்தான். இந்நிலையில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த தனக்கு பணம் வங்கியில் சேர்க்கும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையிடம் மனு அளித்துள்ளார் நாராயணன்.  இதுகுறித்து நாராயணன் கூறுகையில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை துர்கா கோயில் கட்டுவதற்கும், பூஜைக்கும் செலவிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
யாரோ ஒருவருக்கு பரிசு கிடைக்கிறது என்பதற்காக பல குடும்பங்கள் சீரழிகிறது என்பதற்காகத்தான் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் திருட்டுத்தனமாக விற்கும் லாட்டரி சீட்டுகளை நம்பி வாங்கியவர்கள் பலர் பணம், சொத்தை இழந்து தற்கொலைசெய்து கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

21 குண்டுகள் முழங்க… சிவப்பு கம்பளம் விரித்து… விடைபெற்றார் ‘அதிபர்’ டிரம்ப்!

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சிவப்பு கம்பளம் விரித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபர் அரியணை ஏறப்...

“பேஸ்புக்குடன் பயனர்களின் தகவல்களை பகிர மாட்டோம்” – எகிறிய மத்திய அரசு… பம்மிய வாட்ஸ்அப்!

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம் என்று மத்திய அரசின் கடிதத்துக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளித்திருக்கிறது. வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி அப்டேட் பிரச்சினை டெக்...

நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்ஸ்… ரயிலை நிறுத்தி வழிவிட்ட அதிகாரி…

மதுரை ஆம்புலன்சுக்கு வழிவிட ரயிலை நிறுத்தி கேட்டை திறந்துவிட்ட ரயில் நிலைய அதிகாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மதுரை...

“மக்களை ஏமாற்ற ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்”

மதுரை மாவட்டம் ஆ.கொக்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 100 நாள்...
Do NOT follow this link or you will be banned from the site!