Home இந்தியா கூட்டம் நடக்கும் போது அதிகாரிகளுக்கு டீ, காபி உண்டு! பிஸ்கட் கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

கூட்டம் நடக்கும் போது அதிகாரிகளுக்கு டீ, காபி உண்டு! பிஸ்கட் கிடையாது! சுகாதாரத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

இனி நடைபெறும் கூட்டங்களில் பிஸ்கட்டுக்கு பதில் வறுத்த பருப்பு வகைகள், ட்ரை புரூட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தனது அமைச்கத்தின்கீழ் உள்ள அனைத்து துறைகளுக்கும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக ஒரு துறையின் அரசு அதிகாரிகள் கூட்டம் நடக்கும்போது, காபி, டீயோடு பிஸ்கட் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று. வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டா அதிகாரிங்க  எப்படி  முடிவா எடுப்பாங்கன்னு அரசு நினைச்சுதோ என்னவோ தெரியவில்லை. மத்திய சுகாதாதர துறை அமைச்சகம் பிஸ்கட்டுக்கு பதில் நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

டீ, பிஸ்கட்

மத்திய சுகாதார துறை அமைச்சகம் தனது கீழ் உள்ள அனைத்து துறைகளுக்கும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: துறை கேண்டீன் வாயிலாக இனி பிஸ்கட் வழங்கப்படாது. இனி துறை கூட்டங்கள் நடக்கும் போது அரசு அதிகாரிகளுக்கு வறுத்த பருப்புகள், ட்ரை புரூட்ஸ், பாதாம், டேட்ஸ், வால்நட்ஸ் போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமே பரிமாற வேண்டும். மேலும், கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த கூடாது. மத்திய சுகாதார துறை அமைச்சரும், தகுதிவாய்ந்த மருத்துவருமான ஹர்ஷ் வர்தன் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஹர்ஷ் வரதன்

வால்நட்ஸ், பாதாம் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்பு, விட்டமின்கள், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்சிடன்ஸை கொடுக்கின்றன. பேரீச்சம்பழம் (டேட்ஸ்) உடலுக்கு அதிக கலோரி கொடுக்கும். ஆக இனி நடைபெறும் கூட்டங்களில் சுகாதார துறை அதிகாரிகளுக்கு நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள் கிடைக்கும். அதனால இனி கூட்டங்களுக்கு மட்டம் போடாம சுகாதார துறை அதிகாரிகள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள் என நாம எதிர்பார்க்கலாம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கடன் தொல்லையால், மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கோயமுத்தூர் கோவையில் கடன் தொல்லை காரணமாக மீன் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை...

‘விவசாயிகள் போராட்டம்’ டெல்லியில் 144 தடை உத்தரவு!

டெல்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசு தின நாளான இன்று 3...

ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேரலாம் – ஜோ பைடன் உத்தரவு!

அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கான தடையை நீக்கி புதிய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். டிரம்ப் ஆட்சிக் காலத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்...

‘மோடி அரசின் அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறை’ – கண்டிக்கும் திருமாவளவன்!

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டெல்லியில் அமைதியான...
Do NOT follow this link or you will be banned from the site!